இதான் சரியான நேரம்.. 2023 உ.கோ தோல்வியால் முக்கிய முடிவை எடுத்த பாபர் அசாம்.. பாக் ரசிகர்கள் சோகம்

Babar Azam
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 1992 போல கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடிய தலைமையிலான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் 9 லீக் போட்டிகளில் 4 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்தது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக மோசமான வரலாற்றை மாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி தொடர்ந்து 8வது முறையாக உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்து பின்னடைவுக்குள்ளானது.

அதை விட கத்துக்குட்டியாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் வரலாற்றில் முதல் முறையாக தோற்ற பாகிஸ்தான் இந்த உலகக் கோப்பையில் எதிர்பார்த்ததை விட பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் சுமாராக செயல்பட்டது. அதனால் லீக் சுற்றுடன் வெளியேறிய அந்த அணி ஏராளமான கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களை சந்தித்தது.

- Advertisement -

விலகிய பாபர் அசாம்:
மேலும் இந்த தோல்விகளுக்கு பாபர் அசாம் கேப்டனாக சுமாரான முடிவுகளை எடுத்ததும் பேட்ஸ்மேனாக பெரிய ரன்கள் குவிக்க தவறியதும் முக்கிய காரணமாக அமைந்தது. அதன் காரணமாக அவர் பதவி விலக வேண்டும் என்று நிறைய முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் விமர்சித்த நிலையில் நாடு திரும்பியதும் அதைப்பற்றி முடிவெடுக்க உள்ளதாக பாபர் அசாம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் பாகிஸ்தானை வழி நடத்துவதற்காக தமக்கு கொடுக்கப்பட்ட கேப்டன்ஷிப் பொறுப்பை ராஜினாமா செய்வதாக பாபர் அசாம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளது பின்வருமாறு. “2019இல் பாகிஸ்தானை கேப்டனாக வழி நடத்துவதற்கு வாரியத்திடம் இருந்து வந்த அழைப்பை இன்னும் நான் நினைவு வைத்துள்ளேன்”

- Advertisement -

“கடந்த 4 வருடங்களில் அந்த வாய்ப்பில் பல மேடு பள்ளங்களை நான் சந்தித்துள்ளேன். இருப்பினும் என்னுடைய மனதிலிருந்து எப்போதும் நான் பாகிஸ்தானின் பெருமையை உயர்த்துவதற்கே நினைத்தேன். குறிப்பாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக முன்னேறியது சிறந்த தருணமாக இருந்தது. இருப்பினும் இன்று பாகிஸ்தான் அணியின் அனைத்து விதமான கேப்டன் பதவியிலிருந்தும் நான் விலகுகிறேன்”

இதையும் படிங்க: காலில் விழ சொன்னாங்க.. தனது வாழ்நாள் சாதனையை உடைத்த விராட் கோலியை வாழ்த்திய சச்சின்

“இது கடினமான முடிவு என்றாலும் இதுவே அதை எடுப்பதற்கு சரியான நேரம் என்று கருகிறேன். ஆனாலும் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் நான் பாகிஸ்தான் அணிக்கு தொடர்ந்து சாதாரண வீரராக விளையாட உள்ளேன்” என்று கூறினார். இந்த அறிவிப்பு பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மத்தியில் சோகத்தை கொடுத்துள்ளது என்ற சொல்லலாம். இருப்பினும் விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகிய பின் சிறப்பாக செயல்படுவது போல் தாமும் அசத்துவதற்காக இந்த முடிவை அவர் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement