இந்தியா வேர்ல்டு கப்பை ஜெயிக்கும்னு எல்லாரும் நம்புறதுக்கு காரணம் இதுதான் – நாசர் ஹுசைன் ஓபன்டாக்

Nasser-1
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் தகுதி சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது சூப்பர் 12-ஆட்டங்கள் இன்று முதல் நடைபெற இருக்கின்றன. இந்த உலகக் கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்திய அணி நாளை பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. ஏற்கனவே இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடி அந்த இரண்டு ஆட்டங்களிலுமே பலம் வாய்ந்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உள்ளது.

jadeja

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான நாசர் ஹூசைன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்திய அணியும் இருக்கலாம். ஆனால் டி20 கிரிக்கெட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.

அதனால் இந்த அணிதான் கோப்பையை வெல்லும் என்று என்னால் சரியாக சொல்ல முடியாது. ஏனெனில் தனி ஒருவரின் ஆட்டம் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடும். ஒரு தனிப்பட்ட பேட்ஸ்மேன் 70 முதல் 80 ரன்கள் அடித்தாலோ அல்லது ஒரு பவுலர் 3 முதல் 4 பந்துகளில் விக்கெட்டை எடுத்தாலோ ஆட்டம் ஒட்டுமொத்தமாக மாறிவிடலாம். எனவே இந்தியாவை நாக் அவுட் சுற்றில் எந்த அணி வேண்டுமென்றாலும் வீழ்த்த வாய்ப்பு உள்ளது.

ashwin

அதே போன்று நாக் அவுட் போட்டியில் இந்திய அணியின் திட்டம் என்னவென்று தெரியவில்லை. ஏற்கனவே 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியிடம் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த தோல்வியே அதற்கு சரியான சான்று. உலகம் முழுவதும் இந்திய அணி வெற்றி பெறும் என்று மக்கள் நினைப்பதற்கு முக்கிய காரணம் யாதெனில் பேப்பரில் இடம்பெற்றுள்ள இந்திய அணியின் லைன் அப் தான்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி செய்யற இந்த வேலை பெரிய அளவு வொர்க் அவுட் ஆகாது -சுனில் கவாஸ்கர் வெளிப்படை

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் லைன் அப் அவ்வளவு பலமாக உள்ளது. மற்றபடி எந்த அணி வேண்டுமென்றாலும் இந்திய அணியை வீழ்த்த வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்திற்கு தற்போது ரசிகர்களும் தங்களது கருத்துகளை பதிலாக அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement