தோனி செய்யற இந்த வேலை பெரிய அளவு வொர்க் அவுட் ஆகாது -சுனில் கவாஸ்கர் வெளிப்படை

Gavaskar
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நாளை அக்டோபர் 24-ஆம் தேதி இந்த டி20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் மோத இருக்கிறது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாட இருப்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் உள்ளது. மேலும் நாளுக்கு நாள் இந்த போட்டி குறித்த பல்வேறு கருத்துக்களும் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகிறது.

Pak

- Advertisement -

ஏற்கனவே இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தபோது அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டதால் ரசிகர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தோனியின் வருகை இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் என்றும் அவர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த தொடரில் தோனியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் ? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கருத்தினை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னைப் பொறுத்தவரை வழிகாட்டிகளால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. இது சீக்கிரமாக நடைபெற்று முடியும் போட்டி என்பதனால் தோனி டிரெஸ்ஸிங் ரூமில் வீரர்களை தயார் செய்ய உதவலாம்.

dhoni

அதேநேரத்தில் அணிக்கு தேவைப்படும்போது கள வியூகங்களையும் அவர் அமைத்துக் கொடுக்கலாம். மேலும் டைம் அவுட்டின் போது பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுடன் பேச வாய்ப்பு உள்ளது. ஆனால் மற்றபடி போட்டியின் அழுத்தம் தொடங்கி அங்கு விளையாட வேண்டிய அனைத்து பொறுப்புகளும் களத்தில் இருக்கும் வீரர்களிடம் தான் உள்ளது. எனவே தோனியால் இது பெரிய அளவில் பயன் இல்லை.

- Advertisement -

இதையும் படிங்க : ஐ.பி.எல் மெகா ஏலத்திற்கு முன்னர் ஒவ்வொரு அணிகளையும் எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம் – வெளியான செய்தி

இருப்பினும் அவரை இந்த பணிக்கு நியமித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதேபோல் நாக் அவுட் போட்டிகளில் விளையாடும் சரியான ஆடும் லெவனை தேர்வு செய்ய வேண்டும். அதை செய்ய தவறினால் இந்திய அணிக்கு அது பாதகமாக அமையும். இந்த தொடர் முழுவதும் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய வேண்டியது அவசியம் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement