ஐ.பி.எல் மெகா ஏலத்திற்கு முன்னர் ஒவ்வொரு அணிகளையும் எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம் – வெளியான செய்தி

IPL
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்றுள்ள 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த வேலையில் சிஎஸ்கே அணியானது நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி நடப்பு சாம்பியனாக இருந்துவருகிறது. அது தவிர மும்பை அணி ஐந்து முறையும், கொல்கத்தா அணி இருமுறையும், ராஜஸ்தான், சன்ரைசர்ஸ், டெக்கான் சார்ஜஸ் ஆகிய அணிகள் ஒரு முறையும் கைப்பற்றியுள்ளன.

IPL
IPL Cup

இப்படி 14 ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்த ஆண்டு 15-வது ஐபிஎல் தொடரானது இந்தியாவில் நடைபெற இருக்கிறது. தற்போது 8 அணிகள் மட்டுமே பங்கேற்று விளையாடும் இந்த ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு முதல் மேலும் இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகள் விளையாடும் என்று தகவல்கள் வெளியானது. அதனை தொடர்ந்து ஐபிஎல் அணிகளின் வீரர்களின் ஏலம் நடைபெறுகிறது.

- Advertisement -

இந்த மெகா ஏலத்திற்கு முன்னர் இந்த ஏலத்தில் பங்கேற்க இருக்கும் அணிகள் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு பலர் மத்தியில் இருந்தது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக பிசிசிஐ-யின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

ipl-2021-ind

அதன்படி 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரர் அல்லது 2 இந்திய வீரர், 2 வெளிநாட்டு வீரர் என எப்படி வேண்டுமென்றாலும் வீரர்களை தக்க வைக்கலாம். ஆனால் மொத்தமாக நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும். மேலும் இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 90 கோடி வரை செலவு செய்யலாம் என்ற வரைமுறை உள்ளது. ஆனால் இம்முறை 95 முதல் 100 கோடி ரூபாய் வரை செலவு செய்து கொள்ளலாம் என்ற விதிமுறையும் கொண்டுவரப்படவுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலி உலகக்கோப்பையை ஜெயிக்கணுனா அது இவங்க 2 பேர் கையில தான் இருக்கு – ஜான்டி ரோட்ஸ் ஓபன்டாக்

4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் போது 35 முதல் 40 கோடி ரூபாய் வரை அதற்குச் செலவிடப்படும். மீதமுள்ள தொகையில் அனைத்து வீரர்களையும் வாங்கி வேண்டிய கட்டாயத்தில் அனைத்து அணிகளும் உள்ளன. மேலும் கடந்த முறை போன்று ரைட் டூ மேட்ச் கார்டு இம்முறை உதவாது எனவே சரியான இடத்தில் வீரர்களை எடுக்க வேண்டும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement