இந்த தொடரில் நான் ரொம்பவே எதிர்பார்த்த ஒரு விஷயம் மிஸ்ஸிங்.. வருத்தம் தெரிவித்த – நாசர் ஹுசேன்

Nasser-Hussain
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எப்போது நடைபெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் அந்த தொடரானது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஏனெனில் இரு அணிகளும் வெற்றிக்காக சரிசமமான அளவில் கடுமையாக போராடும் என்பதனால் இந்த டெஸ்ட் போட்டிகள் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்ற முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கை சமநிலையில் இருக்கும் வேளையில் மூன்றாவது போட்டியானது பிப்ரவரி 15-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் தான் மிகப்பெரியதாக எதிர்பார்த்த ஒரு விடயம் இதுவரை நடக்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாசர் ஹுசேன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

நான் இந்த தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இடையேயான ஆரோக்கியமான மோதலை அதிகமாக எதிர்பார்த்தேன். ஆனால் இதுவரை அந்த நிகழ்வு இந்த தொடரில் நடைபெறவில்லை. இருப்பினும் எதிர்வரும் மூன்று போட்டிகளில் அவர்களுக்கு இடையேயான போட்டி நடைபெற வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் விராட் கோலி ஆகியோர் எப்போது விளையாடினாலும் மிக ஆரோக்கியமான போட்டி அவர்களுக்கு இடையே நிகழ்துள்ளதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். விராட் கோலியின் விக்கெட்டை ஜேம்ஸ் ஆண்டர்சன் வீழ்த்தி விட்டால் அதனை மிகப் பெரியதாக கொண்டாடுவார்.

இதையும் படிங்க : என்னது நான் அவருக்கு போட்டியா? அப்படியெல்லாம் ஒன்னுமில்லை.. வெளிப்படையாக கூறிய – ஜஸ்ப்ரீத் பும்ரா

அதேபோன்று விராட் கோலியும் ஆண்டர்சனுக்கு எதிராக ரன்களை குவித்தால் அதனை மகிழ்ச்சியாக கொண்டாடுவார். இப்படி அவர்கள் இருவருக்கும் இடையேயான சம்பவம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய அளவில் கவனிக்கப்பட்டும் இருக்கிறது. அதேபோன்று இதுவரை விராட் கோலிக்கு எதிராக 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்டர்சன் அவரை 7 முறை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement