என்னது நான் அவருக்கு போட்டியா? அப்படியெல்லாம் ஒன்னுமில்லை.. வெளிப்படையாக கூறிய – ஜஸ்ப்ரீத் பும்ரா

Bumrah
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்து இந்த தொடரில் சமநிலை வைக்கின்றன. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய இந்திய அணியானது இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் மிகச் சிறப்பான வெற்றிக்கு காரணமாக வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா திகழ்ந்தார். அந்த வகையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் 45 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சிலும் 46 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது பிரபல கிரிக்கெட் விமர்சகரான ஹர்ஷா போக்ளேவுடன் பும்ராவிடம் பல கேள்விகளை எழுப்பினார். அதற்கு பும்ராவும் தனது பதிலினை தெரிவித்திருந்தார்.

குறிப்பாக இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தும் பும்ராவின் சாதனைகள் குறித்த புள்ளிவிவரங்களை அவருக்கு சுட்டி காட்டினார். இதுகுறித்து பேசிய பும்ரா கூறுகையில் : நான் முன்பு கூறியது போன்றே புள்ளி விவரங்களை எப்போதுமே நான் கருத்தில் கொள்வதில்லை. நான் இளைஞனாக இருந்தபோது அதை செய்தேன்.

- Advertisement -

ஆனால் தற்போது என்னுடைய அணிக்காக எந்த அளவில் நான் என்னுடைய பங்களிப்பை வழங்க முடியுமோ அதுவரை வழங்க வேண்டும் என்பதை மட்டுமே பொறுப்பாக எடுத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறேன். அதற்கடுத்த கேள்வியில் ஹர்ஷா போக்ளே அவர்கள் : ஆண்டர்சனுடன் இருக்கும் போட்டி குறித்த கேள்வியை எழுப்பினார்.

இதையும் படிங்க : முதல் 2 போட்டி மட்டுமல்ல.. எஞ்சியுள்ள 3 டெஸ்ட் போட்டிகளிலும் கோலி விளையாட வாய்ப்பில்லை – ஏன் தெரியுமா?

அதற்கு பதிலளித்த பும்ரா கூறுகையில் : நான் கிரிக்கெட்டர் ஆவதற்கு முன்பாகவே உண்மையான வேகப்பந்து வீச்சின் ரசிகன். யார் வேகப்பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். நான் எந்த ஒரு பந்துவீச்சாளருக்கும் போட்டி கிடையாது. என்னுடைய திறனை வெளிப்படுத்துவதில் மட்டுமே என்னுடைய நோக்கம் இருக்கிறது என்று பும்ரா தெரிவித்துள்ளார்.

Advertisement