பென் ஸ்டோக்ஸ் ரிட்டயர்டு ஆனதுக்கு ஐ.சி.சி தான் காரணம் – நாசர் ஹுசேன் குற்றச்சாட்டு

Nasser-1
- Advertisement -

இங்கிலாந்து அணியைச் சேர்ந்த நட்சத்திர ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் தனது 31-வது வயதிலேயே ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் தற்போது அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியோடு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

ஆனாலும் தொடர்ந்து டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என்றும் அவர் தெரிவித்தார். அதோடு ஒருநாள் போட்டிகளில் இப்படி முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கு காரணமாக தனது உடல் தகுதியை அவர் முன்னிறுத்தி சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் இன் ஓய்விற்கு ஐசிசி தான் காரணம் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : தற்போதுள்ள ஐசிசி போட்டிகளின் அட்டவணைப்படி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவது சாத்தியம் இல்லை.

பென் ஸ்டோக்ஸின் இந்த முடிவுக்கு ஐசிசி அட்டவணை தான் காரணம். ஏனெனில் தொடர்ச்சியாக ஓய்வின்றி மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவது என்பது எந்த வீரர்களும் முடியாத ஒன்று. அதோடு தொடர்ச்சியாக இப்படி வீரர்கள் விளையாடினால் பைத்தியம் தான் பிடிக்கும்.

- Advertisement -

ஐசிசி உலக கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் டி20 உலக கோப்பை என அடுத்தடுத்து தொடர்கள் இருப்பதாலும் இருநாட்டு அணிகளுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் இருப்பதினாலும் தொடர்ச்சியாக வீரர்கள் போட்டிகளில் விளையாட நிர்பந்திக்கப்படுகின்றனர்.

இதையும் படிங்க : எனக்காக நீங்க பண்ண எல்லாத்துக்கும் நன்றி. ரசிகர்களுக்கு நன்றி சொல்லி வீடியோ வெளியிட்ட – ஹார்டிக் பாண்டியா

இதனாலே பென் ஸ்டோக்ஸ் முன்கூட்டியே ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டு டி20 மற்றும் டெஸ்ட் போட்டி விளையாட முடிவு எடுத்துள்ளார். அவரது இந்த ஓய்விற்கு ஐசிசி போட்டி அட்டவணையையே காரணமாக நான் பார்க்கிறேன். அதனை ஐசிசி விரைவில் விசாரித்து தகுந்த இடைவெளியுடன் போட்டிகளை நடத்த வேண்டும் என நாசர் ஹுசேன் சாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement