எனக்காக நீங்க பண்ண எல்லாத்துக்கும் நன்றி. ரசிகர்களுக்கு நன்றி சொல்லி வீடியோ வெளியிட்ட – ஹார்டிக் பாண்டியா

Hardik-Pandya
- Advertisement -

இந்திய அணியின் ஆல்ரவுண்டான ஹார்டிக் பாண்டியா இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அசத்தலான கம்பேக் கொடுத்து அறிமுக தொடரிலேயே கேப்டனாக குஜராத் அணியை வழிநடத்தி கோப்பையையும் வென்று அசத்தினார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட காயத்திற்கு பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் கடந்த சில ஆண்டுகளாகவே பந்து வீசாமல் விளையாடி வந்த வேளையில் அவரது ஆட்டம் சற்று விமர்சனத்திற்கு உள்ளாகியது. அந்த வேளையில் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வெடுத்துக் கொண்ட பாண்டியா மீண்டும் தான் பந்து வீசும் அளவிற்கு ஃபிட்டாக திரும்பும் போது அணியில் தன்னை தேர்வு செய்யுமாறு கூறிவிட்டு அணியிலிருந்து விலகினார்.

அதன் பிறகு தீவிர பயிற்சி மற்றும் உடற்தகுதி ஆகியவற்றை பெற ஆறு மாதங்கள் வரை நேரம் எடுத்துக் கொண்ட பாண்டியா நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அருமையாக செயல்படவே மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்தார். அந்த வகையில் இந்திய அணிக்கு திரும்பிய அவர் நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர், அயர்லாந்து அணிக்கு எதிரான தொடர் என அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த தற்போது நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் இடம் பெற்றார்.

- Advertisement -

அப்படி இங்கிலாந்து அணிக்கு எதிராக இடம் பெற்ற பாண்டியா ஒருநாள் தொடரில் தனது அட்டகாசமான ஆட்டத்தை பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே வெளிப்படுத்த அவருக்கு இந்த தொடரின் தொடர்நாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனக்கு ஏற்பட்ட சறுக்கலையும், அதிலிருந்து தற்போது மீண்டு வந்து அபாரமாக விளையாடுவதை மையமாகவும் கொண்டு ஒரு வீடியோ ஒன்றினை சமூக வலைதள பக்கத்தின் மூலமாக வெளியிட்டுள்ளார்.

அதில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் சில கருத்துக்களையும் எழுதியுள்ளார். அந்த வகையில் என்னுடைய வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களில் என்னுடன் இருந்த ரசிகர்களுக்கும், எனக்கு ஆதரவளித்தவர்களுக்கும் நன்றி. காயத்தால் அவதிப்பட்டபோது ஒவ்வொரு நாளும் நான் மீண்டும் பிட்டாக மாற வேண்டும் என்று எண்ணினேன். அத்துடன் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணமும் எனக்குள் இருந்ததால் கடினமாக உழைத்து தற்போது மீண்டும் விளையாடி வருகிறேன்.

- Advertisement -

இந்த சவாலான நேரங்களில் என்னுடன் இருந்தவர்களுக்கு நன்றி என்றும் தற்போது என்னுடைய கம்பேக்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன் என்றும் ஹர்திக் பாண்டியா தெரிவித்து அந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார். அதன்படி ஹார்டிக் பாண்டியா வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

இதையும் படிங்க : தரத்தை எப்போதும் குறைத்து மதிப்பிட வேண்டாம், விமர்சனத்தில் தவிக்கும் நட்சத்திர வீரருக்கு தினேஷ் கார்த்திக் ஆதரவு

மேலும் காயத்தால் அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டதும் அந்த அறுவை சிகிச்சைக்கு பின்பு எப்படியெல்லாம் தயாராகினார் என்பதை விவரிக்கும் வீடியோவாகவும் இது வெளியாகி உள்ளது. அவரது இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி அதிகளவு பகிரப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement