தரத்தை எப்போதும் குறைத்து மதிப்பிட வேண்டாம், விமர்சனத்தில் தவிக்கும் நட்சத்திர வீரருக்கு தினேஷ் கார்த்திக் ஆதரவு

Dinesh-Karthik-1
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடந்த 5-வது டெஸ்ட் போட்டியிலும் சரி அதன்பின் நடந்த டி20 தொடரிலும்ம் சரி கடைசியாக நடந்த ஒருநாள் தொடரிலும் சரி இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதமடித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசிவரை ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் கடைசியாக கடந்த 2019இல் சதமடித்திருந்த அவர் அதன்பின் கடந்த 3 வருடங்களாக டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என எந்த வகையான கிரிக்கெட்டிலும் 100 இன்னிங்ஸ்களுக்கும் மேலாக அடுத்த சதத்தை அடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

IND vs ENG Reece Toply Virat Kohli

- Advertisement -

இத்தனைக்கும் இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் வகித்து வந்த கேப்டன்ஷிப் அழுத்தம் தனது பேட்டிங்கை பாதித்ததாக உணர்ந்த அவர் அந்த பதவிகளை படிப்படியாக ராஜினமா செய்து சாதாரண வீரராக விளையாடும் போதிலும் ஐபிஎல் 2022 தொடரில் 3 கோல்டன் டக் அவுட்டானது உட்பட முன்பை விட சுமாராக செயல்படுகிறார். அதனால் ஒரு கட்டத்தில் சுமாரான பார்மில் இருக்கிறார் என்று பேசிய அனைவரும் பொறுமையிழந்து தற்போது அணியிலிருந்து நீக்குமாறு விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.

நெருக்கடியில் விராட்:
குறிப்பாக பெரிய பெயரை வைத்துக் கொண்டு எத்தனை நாட்கள் ரன்கள் அடிக்காமல் இளம் வீரர்களின் வாய்ப்பையும் கெடுக்கும் வகையில் விளையாடுவீர்கள் என்று முன்னாள் இந்திய ஜாம்பவான் கேப்டன் கபில் தேவ் வெளிப்படையாகவே விமர்சித்தார். இருப்பினும் ஏற்கனவே 70 சதங்களையும் 20000க்கும் மேற்பட்ட ரன்களையும் குவித்து ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்து உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக தன்னை நிரூபித்துள்ள அவர் இடையிடையே 30, 50 போன்ற நல்ல ரன்கள் எடுத்து முடிந்தளவுக்கு இதிலிருந்து விடுபடுவதற்காக முயற்சித்து வருகிறார்.

Babar-Azam-and-Virat-Kohli

மேலும் 70 சதங்களை அடித்துள்ள அவருக்கு கிரேம் ஸ்வான், கெவின் பீட்டர்சன் உள்பட நிறைய வெளிநாட்டு வீரர்கள் ஆதரவு கொடுக்கின்றனர். அதேபோல் மோசமான தருணத்தில் ஆதரவளிக்க வேண்டுமே தவிர விமர்சிக்கக் கூடாது என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஆதரவு கொடுத்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

- Advertisement -

டிகே ஆதரவு:
இந்த மோசமான தருணத்தில் இருந்து விடுபடுவதற்காக சில மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புமாறு ரவிசாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் கொடுத்த ஆலோசனைகளை பின்பற்றாத விராட் கோலி ஏற்கனவே சொன்னது போல் தொடர்ச்சியாக விளையாடாமல் அடுத்ததாக நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வெடுக்க உள்ளார். அதற்காக தனியாக ஒரு விமர்சனத்தை சந்தித்தாலும் இந்த ஓய்வு நிச்சயமாக அவர் பழைய பார்முக்கு திரும்ப உதவும் என்று தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆதரவு கொடுத்துள்ளார்.

dinesh1

சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூர் அணியில் அவருடன் இணைந்து விளையாடிய அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நீண்ட காலங்களாக விராட் கோலி அபாரமான வெற்றிகளை கண்டவர். தற்போது நல்ல ஓய்வு பெற்றுள்ள அவர் புத்துணர்ச்சி அடைந்து இதற்கு முன் அபாரமாக செயல்பட்டதைப்போலவே செயல்படுவார் என்று நம்பலாம். அவரைப் போன்ற தரமான வீரரை எப்போதும் குறைத்து மதிப்பிட்டு நிராகரிக்க முடியாது” என்று கூறினார்.

- Advertisement -

இந்திய அணிக்காக 2019இல் விளையாடியிருந்த தினேஷ் கார்த்திக் அதன்பின் வாய்ப்பு கிடைத்ததால் ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக செயல்பட்டார். அதனால் அவரின் இந்திய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்ததாக அனைவரும் நினைத்த வேளையில் இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் சொல்லி அடித்த அவர் 3 வருடங்களுக்கு பின்பு அபார கம்பேக் கொடுத்தார். அந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் விராட் கோலியும் அதேபோல கடினமாக உழைத்து ஃபார்முக்கு திரும்புவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு.

Virat Kohli Dinesh Karthi RCB

“அது எளிதானது கிடையாது என்றாலும் அதற்காக நான் கடினமாக உழைத்துள்ளேன். தற்போதுள்ள இந்திய அணியில் பெஞ்சில் உள்ள வீரர்களும் தரமானவர்களாக இருப்பதால் போட்டியும் அதிகமாக இருப்பதே இந்திய கிரிக்கெட்டின் தரமாகும். டி20 உலகக்கோப்பைக்கு தயாராக துவங்கியுள்ள எங்களுக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் அதற்கு தயாராவதற்கான வாய்ப்புகளை வழங்கி வருகிறார்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க : காயத்திலிருந்து குணமடைந்து பயிற்சியை துவங்கிய கேஎல் ராகுல் – யார் பவுலிங் எதிர்கொண்டார்னு தெரிந்தால் ஆச்சர்யபடுவீங்க

மேலும் தற்போதைய நிலைமையில் சிறப்பாக செயல்பட்டால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பு தாமாக கிடைக்கும் என்பதால் அதைப்பற்றி பெரிதாக நினைக்கவில்லை என்றும் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

Advertisement