ஜெய்ஸ்வால் ஒன்னும் அதை பாத்து கத்துக்கல.. முடிஞ்சா நீங்க கத்துக்கோங்க.. டெக்கெட்டை விளாசிய நாசர் ஹுசைன்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதி வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதில் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை அடுத்த இரண்டு போட்டிகளில் வீழ்த்திய இந்தியா 2 – 1* என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக மூன்றாவது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

முன்னதாக ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் பின்னர் அதிரடியாக விளையாடி 12 சிக்சருடன் இரட்டை சதமடித்து 214* ரன்கள் குவித்தார். அதன் வாயிலாக இங்கிலாந்துக்கு எதிராக 2 இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்த அவர் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையும் படைத்தார்.

- Advertisement -

பாத்து கத்துக்கோங்க:
ஆனால் அப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல விளையாட வேண்டும் என்ற தங்களுடைய பஸ்பால் அணுகுமுறையை பார்த்து தான் ஜெய்ஸ்வால் அப்படி அதிரடியாக விளையாடியதாக இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் கூறியிருந்தார். இந்நிலையில் ஜெய்ஸ்வால் உள்ளூர் முதல் ஐபிஎல் வரை கடினமாக உழைத்து கிரிக்கெட்டை கற்றுக் கொண்டாரே தவிர இங்கிலாந்தை பார்த்து எதையும் கற்கவில்லை என அவருக்கு முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் பதிலடி கொடுத்துள்ளார்.

எனவே முடிந்தால் நாம் தான் ஜெயிஸ்வாலிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கும் நாசர் ஹுசைன் இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “ஜெய்ஸ்வால் நம்மைப் பார்த்து கற்றுக் கொண்டதாக கருத்துக்கள் வந்தன. அதை நான் தொடப் போகிறேன். ஜெயஸ்வால் உங்களைப் பார்த்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை”

- Advertisement -

“அவர் தனது வளர்ப்பிலிருந்து கற்றுக்கொண்டார். வளரும் போது கடினமாக முயற்சித்த அவர் ஐபிஎல் தொடரிலிருந்து கற்றுக் கொண்டார். எனவே ஏதாவது இருந்தால் நான் அவரை பார்த்து அவரிடமிருந்து கற்றுக் கொள்வேன். எனவே இங்கிலாந்து அணியினர் பொது மற்றும் உடைமாற்றும் அறையில் என்ன சொன்னாலும் அதை சுய பரிசோதனையுடன் தங்கள் அறைக்கு திரும்பி எடுத்துச் செல்வார்கள் என்று நான் நம்புகிறேன்”

இதையும் படிங்க: அடுத்தடுத்த 2 தோல்விகளால் முக்கிய முடிவை கையில் எடுத்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் – விவரம் இதோ

“அந்த இளம் வீரரை பார்த்து என்னால் கற்றுக் கொள்ள முடியும். அதே சமயம் பஸ்பால் சில நேரங்களில் விமர்சிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இப்போதும் அவர்கள் கற்று மேம்படுவதற்கான இடம் இருக்கிறது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது போட்டி ராஞ்சி நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement