அடுத்தடுத்த 2 தோல்விகளால் முக்கிய முடிவை கையில் எடுத்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் – விவரம் இதோ

Stokes
- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கு நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த வேளையில் ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் இந்திய அணியிடம் இங்கிலாந்து அணி பின்னடைவை சந்தித்துள்ளது.

அதனை தொடர்ந்து எதிர்வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி ராஞ்சி நகரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் தற்போது இங்கிலாந்து அணியானது தீவிரமாக தயாராகி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் ஏற்கனவே இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து அணியானது நான்காவது போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறது. இவ்வேளையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

அந்த வகையில் இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் பந்து வீசாமல் இருந்த அவர் நான்காவது போட்டியின் போது பந்துவீச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்ட அவர் டாக்டர்களின் அறிவுறுத்தலின் பேரில் இதுவரை பந்து வீசாமல் இருந்து வந்தார்.

- Advertisement -

ஆனால் தற்போது அணிக்கு வெற்றி முக்கிய தேவை என்கிற நிலையில் அவர் பந்துவீசும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் ஏற்கனவே மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிந்து சில செஷன்கள் பந்துவீச்சு பயிற்சியினை மேற்கொண்ட அவருக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என்பதினால் அவர் எந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : அவரைப்பத்தி அதிகம் பேச தேவையில்லை.. அவர் பர்ஸ்ட் கிளாஸா கரியரை ஸ்டார்ட் பண்ணியிருக்காரு – ரோஹித் புகழாரம்

இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஸ்டோக்ஸ் கூறுகையில் : இந்தியாவுக்கு வந்த பிறகு என்னால் பந்துவீச முடிந்தது. அதிலும் குறிப்பாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கூட நான் பந்துவீசி இருக்கலாம் என்று உணர்ந்தேன். ஆனால் டாக்டர்களின் அறிவுரையின் பேரிலே பந்துவீசாமல் இருந்து வந்ததாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement