ரிக்கி பாண்டிங்கே என்கிட்ட அந்த 21 வயது இந்திய வீரரை பற்றி பாராட்டினாரு – நாசர் ஹுசேன் பகிர்ந்த தகவல்

Nasser-and-Ponting
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே நடைபெற்ற முடிந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணியானது தற்போது டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் எஞ்சியுள்ள இரண்டு போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி இந்த டி20 தொடரையும் கைப்பற்றவும் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த இளம் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சிறப்பான செயல்பாடு அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது. இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் அன்கேப்டு வீரராக 625 ரன்கள் குவித்து சாதனை படைத்த யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு முதல்முறையாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வழங்கப்பட்டது.

- Advertisement -

தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ஜெய்ஸ்வால் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 171 ரன்கள் குவித்து அசத்தினார். இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு டி20 தொடரிலும் அறிமுகமாகும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் 21 வயதான இந்திய வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை ரிக்கி பாண்டிங்கே பாராட்டினார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாசர் உசேன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

இந்திய அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்பொழுது சிறப்பான துவக்கத்தை பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரை தொடர்ந்து தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் அவர் நன்றாக விளையாடி வருகிறார். ஆஷஸ் தொடரின் போது ரிக்கி பாண்டிங் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருடன் நிறைய நேரத்தை செலவிட்டேன். அப்போது அவர்கள் இருவருமே யாஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட்டிலும் விளையாட தகுதியான ஒரு வீரர் என்றும் இந்திய அணிக்காக நிச்சயம் அவர் ஒரு சிறப்பான வீரராக உருவெடுப்பார் என பாராட்டியதாக கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பேட்டிங் டெக்னிக் மற்றும் அவரது மைன்ட் செட் என இரண்டுமே மிகச் சிறப்பாக இருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலுமே ரன்களை குவித்து அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று நினைத்தே அவர் விளையாடுகிறார் அதுவே அவரது சக்ஸஸிற்கு காரணமாக நான் நினைப்பதாக நாசர் உசேன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இங்க எங்கள அடிச்சு நொறுக்கிட்டா போதுமா? அங்க யார் ஜெயிக்குறாங்கன்னு பாருங்க – இந்தியாவை மறைமுகமாக கலாய்த்த சமி

டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியிலேயே 171 ரன்கள் அடித்து அசத்திய ஜெயிஸ்வால் டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியின் போது அறிமுகமாகி ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்திருந்தாலும் எஞ்சியுள்ள இரண்டு போட்டியிலும் அவரே விளையாடுவார் என்றும் அதில் நிச்சயம் அவர் பெரிய ரன்களை குவிப்பார் என்றும் ரசிகர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement