இங்க எங்கள அடிச்சு நொறுக்கிட்டா போதுமா? அங்க யார் ஜெயிக்குறாங்கன்னு பாருங்க – இந்திய அணியை மறைமுகமாக கலாய்த்த சமி

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் முதலில் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 1 – 0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. சொல்லப்போனால் 2வது போட்டியில் கடைசி நாளில் மழை வந்து தடுத்ததால் தப்பிய வெஸ்ட் இண்டீஸ் டிரா செய்து ஒய்ட் வாஷ் அவமானத்தை தவிர்த்த நிலையில் அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) மீண்டும் தோல்வியை சந்தித்தது.

குறிப்பாக 1975, 1979 ஆகிய அடுத்தடுத்த உலகக் கோப்பைகளை வென்ற அந்த அணி இம்முறை இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக் கோப்பைக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறி அவமானத்தை சந்தித்தது அனைவருக்குமே சோகமாக அமைந்தது. அந்த நிலைமையில் 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற அந்த தொடரில் பெயருக்காக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 2வது போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 2019க்குப்பின் முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் வென்று நிம்மதி பெருமூச்சு விட்டது.

- Advertisement -

கலாய்த்த சமி:
ஆனாலும் 3வது போட்டியில் தோல்வியை சந்தித்த அந்த அணி அடுத்ததாக 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வென்றது. குறிப்பாக 2016க்குப்பின் இந்தியாவை அடுத்தடுத்த போட்டிகளில் தோற்கடித்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் போட்டிகளில் இன்னும் நாங்கள் வீழ்ந்து விடவில்லை என்பதை நிரூபித்தது. இருப்பினும் 3வது போட்டியில் வென்ற இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்து தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

மேலும் இந்த சுற்றுப்பயணத்தில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா போன்ற அறிமுக வீரர்களே வெஸ்ட் இண்டீஸை அடித்து நொறுக்கும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அதனால் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்கள் தேவையில்லை என்று கருதும் இந்திய அணி நிர்வாகம் இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை ஒரு சோதனையை செய்து பார்க்கும் இடமாக கருதுகிறது. இந்நிலையில் ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களுடன் இது போன்ற சாதாரண இருதரப்பு தொடர்களில் வெஸ்ட் இண்டீஸை அடித்து நொறுக்கினாலும் ஐசிசி தொடரில் யார் வெல்கிறார் என்பதை பாருங்கள் என முன்னாள் கேப்டன் டேரன் சமி மறைமுகமாக இந்தியாவை கலாய்த்துள்ளார்.

- Advertisement -

அதாவது இருதரப்பு தொடர்களில் வெல்லும் இந்தியா 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை சுட்டிக்காட்டும் அவர் இப்போதும் 2 டி20 உலகக் கோப்பைகளை வென்று வெஸ்ட் இண்டீஸ் வெற்றிகரமான அணியாக இருப்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளார். அதே சமயம் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் தடுமாறும் தங்களை போல் அல்லாமல் இந்தியாவின் சிஸ்டம் சிறப்பாக இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி விமல் குமார் யூடியூப் சேனலில் பேசியது பின்வருமாறு.

“ஹர்டிக் பாண்டியா, ஜெய்ஸ்வால் போன்ற தரமான வீரர்களை இந்தியா கடந்த பல வருடங்களாக உருவாக்கி வருகிறார்கள். ஆனால் அதே சமயம் நீங்கள் சர்வதேச தொடர்களில் யார் வெல்கிறார்கள் என்பதை பற்றியும் யோசித்துப் பார்க்க வேண்டும். ஏற்கனவே நான் சொன்னது போல் ஜெயிஸ்வால், கில் போன்றவர்கள் வரிசையில் சஞ்சு சாம்சன் போன்ற வாய்ப்பு பெறாதவர்கள் கூட அசத்துபவர்களாக இருக்கின்றனர். அதே போல இளமையாக இருக்கும் ஹர்திக் பாண்டியா இந்திய அணியுடன் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாடுகிறார்”

இதையும் படிங்க:இங்க எங்கள அடிச்சு நொறுக்கிட்டா போதுமா? அங்க யார் ஜெயிக்குறாங்கன்னு பாருங்க – இந்தியாவை மறைமுகமாக கலாய்த்த சமி

“இது இந்தியாவால் எந்தளவுக்கு இளம் வீரர்களை தொடர்ந்து உருவாக்க முடிகிறது என்பதை காட்டுகிறது. குறிப்பாக முதல் தர கிரிக்கெட்டில் 9 போட்டிகளில் 1800 ரன்கள் அடித்துள்ள ஜெய்ஸ்வால் டாமினிக்காவுக்கு வந்து அறிமுகமாகி சர்வதேச கிரிக்கெட்டுக்கு பொருத்தமானவர் என்பதை நிரூபித்தார். அப்படி சர்வதேச கிரிக்கெட்டுக்கு பொருந்தக்கூடிய வீரர்களை உருவாக்கும் அளவுக்கு இந்தியாவின் முதல் தர போட்டிகளின் அடிப்படை சிறப்பாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement