நாசர் ஹுசைன் பணத்தை வாங்கிட்டு விராட் கோலி தப்பு சொன்னாரு.. மீண்டும் விமர்சித்த ஹர்பஜன் சிங்

Harbhajan Singh 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற பாகிஸ்தான் 90% செமி ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. முன்னதாக சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் ராசி வேன் டெர் டுஷன் எல்பிடபிள்யூ முறையில் ரிவ்யூ செய்யும் போது முதல் சோதனையில் ஸ்டம்பில் படாத பந்து 2வது சோதனையில் கண்கட்டி வித்தையாக ஸ்டம்ப்பின் மீது பட்டதால் அவுட் கொடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதை விட கடைசி விக்கெட்டுக்கு போராடிய தப்ரிஸ் சம்ஸிக்கு எதிராக எல்பிடபுள்யூ முறையில் பாகிஸ்தான் அணியினர் அவுட் கேட்ட போது நடுவர் கொடுக்கவில்லை. அதனால் பாகிஸ்தான் அணியினர் ரிவ்யூ எடுத்த போது ஸ்டம்ப் மீது பந்து முழுவதுமாக அடிக்காமல் லேசாக உரசியதன் காரணமாக களத்தில் இருந்த நடுவர் கொடுத்த தீர்ப்பை மீண்டும் 3வது நடுவர் வழங்கினார்.

- Advertisement -

ஹர்பஜன் விளாசல்:
அதனால் தங்களுடைய வெற்றி பறிபோனதாக பாபர் அசாம் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த நிலையில் மோசமான அம்பயரிங் காரணமாகவே பாகிஸ்தான் தோற்றதாக ஹர்பஜன் சிங் ட்விட்டரில் விமர்சித்தார். மேலும் ரிவ்யூ எடுக்கும் போது நடுவர் கொடுக்கும் தீர்ப்பை கருத்தில் கொள்ளாமல் ஸ்டம்ப் மீது பந்து பட்டாலே அவுட் கொடுக்கும் வகையில் ஐசிசி விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்றும் அவர் விமர்சித்தார்.

ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத ஒரு ரசிகர் இதற்கு முன்பு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் இதே போன்ற சூழ்நிலை அடங்கிய வீடியோவை அவருக்கு பதிலடியாக கொடுத்தார். அதாவது அப்போட்டியில் ஒரு இங்கிலாந்து பேட்ஸ்மேனுக்கு எதிராக எல்பிடபுள்யூ முறையில் இந்தியா அவுட் கேட்டது. அதை சோதித்த போது ஸ்டம்ப் மீது பந்து அடிக்காமல் லேசாக உரசியதன் காரணமாக நடுவர் அவுட் கொடுக்காததற்கு விராட் கோலி எதிர்ப்பு தெரிவித்தார்.

- Advertisement -

இருப்பினும் “பந்து ஸ்டம்ப் மீது பட்டிருக்கலாம் படாமலும் போயிருக்கலாம்” என்பதாலேயே நடுவர்களின் தீர்ப்பு எல்பிடபுள்யூ சோதனையின் போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதாக அப்போட்டியின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நாசர் ஹுசைன் நிதர்சனங்களை விளக்கி பேசினார். அப்படி நாசர் ஹுசைன் பேசியிருந்த பழைய வீடியோவை ஹர்பஜனுக்கு அந்த ரசிகர் பதிலடியாக கொடுத்திருந்தார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத ஹர்பஜன் தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் டெக்னாலஜி சரி என்பதை நிரூபிப்பதற்காக வாங்கிய சம்பளத்திற்கு நாசர் ஹுசைன் அப்படி பேசியதாக ஹர்பஜன் தற்போது புதிய பதிலடி கொடுத்துள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: அந்த 3 பிளேயர்ஸ்க்கு நான் ரசிகன்.. அவங்களிடம் அதை கத்துக்கிட்டு இருக்கேன்.. பாபர் அசாம் வெளிப்படையான பேட்டி

“டெக்னாலஜி சரி என்று இப்படி பேசுவதற்காக அவருக்கு பணம் கொடுக்கப்பட்டது. அதனால் நாசர் ஹுசைன் டெக்னாலஜி சரி என்றும் விராட் கோலி தவறு என்றும் பேசினார். ஒருவேளை டெக்னாலஜி சரி என்றால் நீங்கள் ஏன் நடுவர் கொடுக்கும் தீர்ப்புகளை ஏற்கிறீர்கள்? எனவே ஒன்று டெக்னாலஜியை நம்புங்கள் அல்லது நடுவரை நம்புங்கள். அதை விட்டுவிட்டு விளையாட்டை குருட்டுத்தனமாக நம்பும் ரசிகர்களை முட்டாளாக்காதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement