உங்களுக்கு நான் சொல்லாம எப்படி. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த – நரேந்திர மோடி

Modi
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியானது நவம்பர் 15-ஆம் தேதி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 398 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது இறுதிவரை போராடியும் 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதன்காரணமாக இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இந்த தொடரில் தங்களது பத்தாவது வெற்றியை பதிவு செய்ததோடு சேர்த்து இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

- Advertisement -

இவ்வேளையில் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமூக வலைதள பக்கத்தின் மூலம் இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் : இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு போட்டிக்கு சீல் வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : ஜஹீர் கானின் வாழ்நாள் சாதனை தகர்ப்பு.. ஸ்டுவர்ட் பின்னியை முந்திய ஷமி.. 3 புதிய வரலாற்று சாதனை

இறுதிப் போட்டிக்கு செல்லும் இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவர் பதிவிட்டுள்ள மற்றொரு கருத்தில் : இன்றைய போட்டியில் தனி ஒருவராக முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி நமது அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார். அவருக்கும் எனது வாழ்த்துக்கள் என முகமது ஷமியின் பெயரை குறிப்பிட்டு ஒரு பதிவினையும் மோடி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement