அனல் பறந்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற முதல் செமி ஃபைனலில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோகித் சர்மா 47, கில் 80*, விராட் கோலி 117, ஸ்ரேயாஸ் ஐயர் 105, கேஎல் ராகுல் 39* ரன்கள் எடுத்த உதவியுடன் 398 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதை துரத்திய நியூசிலாந்து முடிந்தளவுக்கு போராடிய போதிலும் 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்து இத்தொடரிலிருந்து வெளியேறியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டார்ல் மிட்சேல் சதமடித்து 134, கேப்டன் கேன் வில்லியம்சன் 69 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.
மிரட்டிய ஷமி:
இதனால் ஐசிசி நாக் அவுட் போட்டியில் முதல் முறையாக நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா 2019 தோல்விக்கு பதிலடி கொடுத்து பழி தீர்த்தது இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 9.5 ஓவரில் 57 ரன்கள் மட்டும் கொடுத்து 7 விக்கெட்டுகளை சாய்த்த முகமது ஷமி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
1. குறிப்பாக முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்த அவர் அடுத்த 6 போட்டியில் 23 விக்கெட்டுகளை எடுத்து 2023 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலராக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதை விட மொத்தமாக தம்முடைய கேரியரில் 17 உலகக்கோப்பை போட்டிகளில் அவர் இதுவரை 54* விக்கெட்களை எடுத்துள்ளார். இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் 50 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற மாபெரும் வரலாற்றை அவர் படைத்துள்ளார்.
2. அதை விட 700க்கும் மேற்பட்ட ரன்கள் அடிக்கப்பட்ட பேட்டிங்கு சாதகமான மும்பை மைதானத்தில் அவர் மட்டும் தனியாளாக 7 விக்கெட்களை அதுவும் அழுத்தமான செமி ஃபைனலில் எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஒரு ஐசிசி தொடரில் ஒரு நாக் அவுட் போட்டியில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற சரித்திரத்தையும் அவர் படைத்துள்ளார்.
3. அது போக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 7 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற மாபெரும் வரலாற்றையும் அவர் படைத்துள்ளார். அதை விட ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த இந்திய பவுலர் என்ற மாபெரும் சரித்திரத்தையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. முகமது ஷமி : 7/57, நியூசிலாந்துக்கு எதிராக, 2023*
2. ஸ்டுவர்ட் பின்னி : 6/4, வங்கதேசத்துக்கு எதிராக, 2014
இதையும் படிங்க: அரையிறுதியில் தோல்வியை சந்தித்த பிறகும் இந்தியா அணியை மனதார பாராட்டி பெரிய மனசை – காட்டிய கேன் வில்லியம்சன்
4. இது மட்டுமல்லாமல் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர் என்ற சரித்திர சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. முகமது ஷமி : 23* (2023)
2. ஜஹீர் கான் : 21 (2011)