அரையிறுதியில் தோல்வியை சந்தித்த பிறகும் இந்தியா அணியை மனதார பாராட்டி பெரிய மனசை – காட்டிய கேன் வில்லியம்சன்

Williamson
Advertisement

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த நடப்பு 50 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது.

பின்னர் 398 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது கடைசி வரை போராடி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் தங்களது தொடர்ச்சியான பத்தாவது வெற்றியையும் பதிவு செய்தது.

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில் : முதலில் நான் இந்திய அணிக்கு வாழ்த்துக்களை சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் இந்த தொடர் முழுவதுமே இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. உண்மையிலேயே இந்த போட்டியிலும் அவர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். சர்வதேச கிரிக்கெட்டில் அவர்கள் ஒரு தரம் வாய்ந்த அணி என்பதை இந்த போட்டியின் மூலமும் அவர்கள் நிரூபித்துள்ளனர்.

உண்மையில் இந்திய அணியின் வீரர்கள் விளையாடிய விதமே அவர்களது வெற்றிக்கு காரணம். இருந்த போதும் நாங்கள் இன்றைய போட்டியில் போராடிய விதத்தை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. நாக்அவுட் போட்டியில் இந்த தோல்வி எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் இந்தியா போன்ற ஒரு தரமான அணியிடம் தோல்வி அடைந்ததில் நினைத்து நாங்கள் மகிழ்கிறோம்.

- Advertisement -

இந்திய அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் அனைவருமே உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள். அவர்கள் இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த போட்டியில் அனைத்து விதத்திலும் இந்திய அணி எங்களை விட சிறப்பாக செயல்பட்டது. இந்த மைதானத்தில் இருந்த ரசிகர்களும் மிகச்சிறப்பாக ஆதரவளித்தனர். ஆனாலும் ரசிகர்கள் இந்திய அணிக்காக மட்டுமே ஒருதலை பட்சமாக இருந்ததாக நினைக்கிறேன். இருந்தாலும் இங்கு இவ்வளவு பேர் மத்தியில் விளையாடியதையும் இந்தியா இந்த தொடரையும் நடத்தியதும் நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம்.

இதையும் படிங்க : இங்க நெறைய ஆடிட்டேன்.. ஆனா ரிலாக்ஸ் எடுக்க விரும்பல.. அரையிறுதி வெற்றிக்கு பின்னர் – ரோஹித் சர்மா அளித்த பேட்டி

ஒரு அணியாக நாங்கள் இந்த தொடர் முழுவதும் மிகச்சிறப்பாகவே விளையாடி வந்தோம். இந்த தொடரில் ரச்சின் ரவீந்திரா மற்றும் மிட்சல் ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்பெஷல் பிளேயர்களாக திகழ்ந்தனர். பவுலர்களும் மிகச்சிறப்பாகவே செயல்பட்டனர். ஒரு அணியாக நாங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர காத்திருக்கிறோம் என கேன் வில்லியம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement