IND vs AUS : 4 ஆவது டெஸ்ட் போட்டியை நேரில் காண வரும் பிரதமர் நரேந்திர மோடி – ஏன் தெரியுமா?

Modi
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் மூன்று ஆட்டங்களின் முடிவில் இந்திய அணி 2 வெற்றியும், ஆஸ்திரேலியா அணி ஒரு வெற்றியும் பெற்று இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இருக்கின்றனர்.

KS Bharat

- Advertisement -

இதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையே தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை மார்ச் 9-ஆம் தேதி வியாழக்கிழமை துவங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்யும் என்பதனால் இந்த போட்டியில் இந்திய அணி தங்களது கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த இருக்கிறது.

அதேவேளையில் இந்த நான்காவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்யும் முனைப்புடன் ஆஸ்திரேலியா அணியும் காத்திருப்பதால் இந்த நான்காவது போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பல தொடர்களாகவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வியை சந்திக்காமல் இருக்கும் இந்திய அணி இம்முறையும் மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Modi and Antony

அந்தவகையில் நாளை நடைபெறவுள்ள இந்த போட்டி அனைவரது மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வேளையில் உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் முதல்நாள் போட்டியை காண இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்போனிசும் நேரில் காண வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை இருநாட்டை சேர்ந்த அரசாங்கமும் உறுதி செய்துள்ளனர்.

- Advertisement -

இதன் காரணமாக நாளை முதல்நாள் ஆட்டத்தை இருநாட்டு பிரதமர்களும் நேரில் பார்ப்பார்கள் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் இந்த போட்டியை நேரில் காண மைதானத்திற்கு வருவதால் மரியாதை நிமித்தமாக நரேந்திர மோடியும் அவருடன் போட்டியை கண்டுகளிக்க உள்ளார். இதனால் தற்போது மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே மைதானத்தில் இருக்கும் பாதுகாப்புகளை தவிர கூடுதலாக 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : முடிவு கிடைக்கணும்னு தான் பிட்சை அப்படி ரெடி ரெடி பண்றாங்க. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த – ராகுல் டிராவிட்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான இந்த நரேந்திர மோடி மைதானத்தில் ஒரு லட்சத்து 32,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி உள்ளது. நாளை இருநாட்டு பிரதமர்களும் போட்டியை நேரில் காண வருவதால் நிச்சயம் முதல்நாள் ஆட்டத்தை காண மைதானத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement