2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் காண வரும் முக்கிய நபர் – உச்சகட்ட பாதுகாப்பில் அகமதாபாத் மைதானம்

Rohit
- Advertisement -

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய ஐசிசி-யின் 13-வது 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் நவம்பர் 19-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நிறைவடைய இருக்கிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

அதன்படி நடைபெற்ற முடிந்த முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணியானது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன் மோதும். அந்த இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றும் என்பதால் அந்த இறுதிப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இந்த 50 ஓவர் உலககோப்பை தொடரில் இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணியே சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில் இந்த இறுதி போட்டிக்கான எதிர்பார்ப்பு தற்போது அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் கூடுதலாக இந்த போட்டியின் மீதான சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடைசி போட்டியை காண மைதானத்திற்கு நேரில் வருவார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் நிச்சயம் அவர் மைதானத்தில் சில மணி நேரங்களாவது போட்டியை நேரில் கண்டு களிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தற்போது அகமதாபாத் மைதானம் உச்சகட்ட கண்காணிப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க : வில்லியம்சனின் கேட்சை விட்ட முகமது ஷமிக்கு கேப்டன் ரோஹித் வழங்கிய தண்டனை – என்ன தெரியுமா?

நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த இறுதிப்போட்டியில் அவரே நேரில் வந்து காண இருப்பதினால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும் பிரதமர் போட்டியை முழுவதுமாக காணுவாரா? அவர் எந்த நேரத்தில் வருவார்? எதுவரை இருப்பார்? என்ற அதிகாரவபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்றாலும் நிச்சயம் அவர் போட்டியை கண்டு களிப்பார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement