விராட் கோலியை சீண்டிய தென்னாபிரிக்க பவுலர். கோலியையா சீண்டுறீங்க – ரசிகர்கள் கொந்தளிப்பு

Burger
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது ஜனவரி 3-ஆம் தேதி கேப்டவுன் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது தங்களது முதல் இன்னிங்சில் ஆரம்பம் முதலே தடுமாறியது.

குறிப்பாக இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் கடுமையாக திணறிய தென்னாப்பிரிக்க அணியானது முதல் இன்னிங்சில் 23.2 ஓவர்களை மட்டுமே சந்தித்து வெறும் 55 ரன்கள் மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது மிகச் சிறப்பாக விளையாடி வந்த வேளையில் 153 ரன்களில் பரிதாபமாக தங்களது இன்னிங்சை முடித்துக் கொண்டது.

அதன் பின்னர் தற்போது 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் குவித்துள்ளது.

- Advertisement -

இந்திய அணியை விட 36 ரன்கள் பின்தங்கியுள்ள தென்னாப்பிரிக்க அணி இரண்டாம் நாள் ஆட்டத்தில் நிச்சயம் சுருண்டு விடும் என்பதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு சற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது தென் ஆப்பிரிக்க வீரர் நான்ட்ரே பர்கர் விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்யும் விதமாக சீண்டினார்.

இதையும் படிங்க : முதல் டெஸ்டில் இவர விட்டிங்களேப்பா.. முதல் இந்திய பவுலராக தனித்துவ சாதனை படைத்த முகேஷ் குமார்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது போட்டியில் மட்டுமே விளையாடும் ஒரு வீரர் இப்படி விராத் கோலி போன்ற அனுபவம் வாய்ந்த வீரரை சீண்டியது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏற்கனவே விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்த பல பந்துவீச்சாளர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். கொஞ்சம் ஜாக்கிரதை என்பது போல தெ.ஆ பவுலரை விமர்சித்தும் ரசிகர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement