பிட்ச்லாம் நல்லா தான் இருந்துச்சி. ஆனாலும் நாங்க தோக்க இதுவே காரணம் – நஜ்முல் ஷாண்டோ வருத்தம்

Shanto
- Advertisement -

நடப்பு 50-ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 11-ஆவது லீக் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 13-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான பங்களாதேஷ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி ரசிகர்களை மகிழ்விக்கும் அளவிற்கு மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

அந்த வகையில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பங்களாதேஷ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பங்களாதேஷ் அணி சார்பாக அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 66 ரன்களையும், கேப்டன் ஷாஹிப் அல் ஹசன் 40 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 246 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 42.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 248 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய பங்களாதேஷ் அணியின் இளம் நட்சத்திர வீரரான நஜ்முல் ஷாண்டோ கூறுகையில் : ஷாகிப் அல் ஹசனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள சென்றுள்ளார். அந்த ஸ்கேன் பரிசோதனைக்கு பிறகே அவரது நிலைமை குறித்து தெரிய வரும்.

- Advertisement -

இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. அதோடு துவக்கமும் எங்களுக்கு சரியாக அமையவில்லை. கடந்த போட்டியை விட இந்த போட்டியின் முதல் 10-15 ஓவர்களில் நாங்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இந்த மைதானம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாகவே இருந்தது. அதிலும் குறிப்பாக புதுப்பந்தில் நன்றாக பவுன்ஸ் ஆகி வந்தது.

இதையும் படிங்க : சென்னை பிட்ச் நல்லாருக்கு.. வங்கதேசத்தை தோற்கடிக்க காரணம் அவங்க தான்.. வில்லியம்சன் பேட்டி

ஆனாலும் நாங்கள் பேட்டிங்கில் பொறுப்பாக ஆட தவறிவிட்டோம். முதல் 10-15 ஓவர்களை சரியாக விளையாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த போட்டியில் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். ஆனால் பேட்டிங்கில் நாங்கள் சொதப்பியதாலே இந்த தோல்வியை சந்தித்ததாக நஜ்முல் ஷாண்டோ கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement