சென்னை பிட்ச் நல்லாருக்கு.. வங்கதேசத்தை தோற்கடிக்க காரணம் அவங்க தான்.. வில்லியம்சன் பேட்டி

Kane Williamson
- Advertisement -

இந்தியாவில் கோலாலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 13ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற 12வது லீக் போட்டியில் வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த நியூசிலாந்து தங்களின் 3வது வெற்றியை ருசித்தது. மதியம் 2 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவரில் 245/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சாகிப் அல் ஹசன் 40, முஸ்பிகர் ரஹீம் 66 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக லக்கி பெர்குசன் 3 விக்கெட்களையும் மாட் ஹென்றி, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 246 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு ரச்சின் ரவீந்தரா ஆரம்பத்திலேயே 9 ரன்கள் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சென்னை பிட்ச்:
இருப்பினும் அடுத்ததாக வந்த கேப்டன் கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்த மற்றொரு துவக்க வீரர் டேவோன் கான்வே 2வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 45 ரன்களில் அவுட்டானார். அதே போல மறுபுறம் தொடர்ந்து அசத்திய வில்லியம்சன் 78* (107) ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்த போது கையில் காயத்தை சந்தித்து வெளியேறினார். இருப்பினும் மறுபுறம் அவருடன் அதிரடியாக விளையாடிய டார்ல் மிட்சேல் 89* (67) ரன்களும் கிளன் பிலிப்ஸ் 16* ரன்களும் எடுத்ததால் 42.5 ஓவரிலேயே நியூசிலாந்து இலக்கை எட்டி எளிதாக வென்றது.

அதனால் சாகிப், முஸ்தபிஸூர் ரகுமான் தலா 1 விக்கெட் எடுத்தும் வங்கதேசம் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் பெர்குசன், டார்ல் மிட்சேல் போன்ற அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டதுடன் பேட்டிங்கில் 2 பார்ட்னர்ஷிப் அமைத்ததால் வங்கதேசத்தை எளிதாக தோற்கடிக்க முடிந்ததாக தெரிவிக்கும் கேன் வில்லியம்சன் சென்னை பிட்ச் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமாக நன்றாக இருந்ததாக கூறியுள்ளார். மேலும் அளவில் காயத்தை சந்திக்கவில்லை என்றும் தெரிவிக்கும் அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. ”

- Advertisement -

“தற்போது காயத்தால் பேட்டை சற்று கடினமாக பிடிக்கிறேன். முதல் பகுதியில் எங்களுடைய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். அதே போல பேட்டிங்கில் சில பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசி வரை போட்டியை எடுத்துச் சென்றனர். இருப்பினும் பவர்பிளே முதல் மிடில் ஓவர்கள் வரை நாங்கள் பிட்ச்சில் சற்று கடினமாக அடிக்க வேண்டியிருந்தது. அந்த வகையில் பிட்ச் நன்றாக போட்டி மிகுந்ததாக இருந்தது”

இதையும் படிங்க: வில்லியம்சனுக்கு மீண்டும் நேர்ந்த சோகம்.. வங்கதேசத்தை வீழ்த்திய நியூஸிலாந்து.. ஹாட்ரிக் வெற்றி பெற்றது எப்படி?

“பெர்குசன் சிறப்பாக விளையாடினார். எங்களுடைய சீம் பவுலர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர். மேலும் நாங்கள் புதிய பந்தில் தடுமாறினாலும் பேட்டிங்கில் சில நல்ல பார்ட்னர்ஷிப்பை நாங்கள் அமைத்தோம். டார்ல் மிட்சேல் எப்போதுமே தன்னைப் பற்றி கவலைப்படாமல் அணிக்காக பங்காற்றக் கூடியவர். அவர் விளையாடியதை பார்த்தது சிறப்பாக இருந்தது. மொத்தமாக இது அணியின் நல்ல செயல்பாடாகும்” என்று கூறினார்.

Advertisement