- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒதுக்குறேன் அது முடிஞ்சு போன கதை.. இந்தியாவில் அதைப் பற்றி நினைக்கல.. வங்கதேச கேப்டன் பல்டி கருத்து

இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்குகிறது. சென்னையில் துவங்கும் அந்தத் தொடரை வென்று 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற இந்தியா தயாராகியுள்ளது. ஆனால் சமீபத்தில் 2 – 0 என்ற கணக்கில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக தோற்கடித்து வங்கதேசம் வரலாறு படைத்தது.

அந்த வெற்றியால் கிடைத்த உத்வேகத்துடன் இந்தியாவையும் வீழ்த்துவோம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ சவால் விடுத்தார். குறிப்பாக மெஹதி ஹசன், ஷாகிப் அல் ஹசன், ரஹீம் போன்ற அனுபவமிக்க வீரர்கள் இந்தியாவை வீழ்த்த உதவுவார்கள் என்று அவர் கூறியிருந்தார். மறுபுறம் கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்து இப்படித்தான் சவால் விடுத்ததாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

- Advertisement -

வங்கதேச கேப்டனின் பல்டி:

ஆனால் கடைசியில் இந்திய அணி போட்டிகளில் கவனம் செலுத்தி 4 – 1 என்ற கணக்கில் வென்றதாகவும் ரோஹித் வர்மா கூறினார். எனவே வங்கதேசம் அணியினர் சவால் விடுத்து ஜாலியாக இருக்கட்டும் கடைசியில் இந்தியாவே வெல்லும் என்று ரோஹித் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி முடிந்து போன கதை என்பதை ஒப்புக் கொள்வதாக வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ கூறியுள்ளார்.

எனவே இந்த புதிய தொடரில் வலுவான இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் என்று அவர் திடீரென பல்டியடிக்கும் கருத்தை தெரிவித்துள்ளார். இது பற்றி சென்னையில் முதல் போட்டிக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு. “பிட்ச் பொறுத்த வரை நன்றாகவே இருப்பதாக தெரிகிறது. அதைப்பற்றி நான் அதிகமாக பேச விரும்பவில்லை”

- Advertisement -

வெற்றியை நினைக்கல:

“அந்த பிட்ச்க்கு தகுந்தார் போல் எங்களை விரைவாக உட்படுத்திக் கொள்ள முயற்சிப்போம். எங்களிடம் அனுபவிக்க ஸ்பின்னர்கள் உள்ளனர். கடந்த சில வருடங்களாக எங்களிடம் நல்ல வேகப்பந்து வீச்சாளர்களும் உள்ளனர். அவர்கள் அனுபவமிக்கவர்கள் கிடையாது என்பது எனக்கு தெரியும். ஆனால் அவர்கள் நன்றாக செயல்படும் திறமை கொண்டவர்கள். பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம். அது நிறைய தன்னம்பிக்கையை கொடுத்தது”

இதையும் படிங்க: ஆஸியில் மறுபடியும் இந்தியா ஜெய்க்க வாய்ப்பிருக்கு.. அதுக்கு அந்த 2 பேர் அசத்துவது முக்கியம்.. ஸ்டீவ் வாக்

“ஆனால் அது கடந்த காலம். இங்கே நாங்கள் புதிய தொடரில் விளையாட வந்துள்ளோம். இங்கே நல்ல கிரிக்கெட்டை விளையாட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இங்கே வெற்றி தோல்வி கிடைக்குமா என்பதை பற்றி நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் நன்றாக விளையாடுவதற்கான செயல்முறைகளை பின்பற்றுகிறோம்” என்று கூறினார்.

- Advertisement -