- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்த 2 காரணத்தால் இந்தியாவை மாதிரி டீமை சாய்த்து 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை தூக்குவோம்.. சாண்டோ

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரும் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் கோலாகலமாக துவங்குகிறது. மினி உலகக் கோப்பை என்று கிரிக்கெட் ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இந்தத் தொடரில் உலகின் டாப் 8 அணிகள் விளையாட உள்ளன. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் எதிர்கொள்கிறது. அதற்கு முன்பாக நடைபெற்ற இங்கிலாந்து ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

அதனால் 2013க்குப்பின் சாம்பியன்ஸ் ட்ராபியை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த சூழ்நிலையில் இந்தியா உட்பட அனைத்து அணிகளையும் தோற்கடித்து நாங்கள் கோப்பையை தட்டி தூக்குவோம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ தெரிவித்துள்ளார்.

- Advertisement -

வங்கதேசம் எச்சரிக்கை:

ஏனெனில் அதற்குத் தகுதியான அணியாக இருப்பதாலேயே சாம்பியன்ஸ் டிராபிக்கு நாங்கள் தகுதி பெற்றுள்ளதாக சாண்டோ கூறியுள்ளார். மேலும் தங்களிடம் வலுவான பவுலிங் இருப்பதாக கூறும் அவர் இது பற்றி செய்தியாளர்களிடம் பேசியது பின்வருமாறு. “நாங்கள் சாம்பியனாக சாதனைப் படைக்க சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு செல்கிறோம். இந்தத் தொடரில் விளையாடும் அனைத்து 8 அணிகளுமே சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு தகுதியானவர்கள்”

“அவர்கள் அனைவருமே தரமான அணிகள். எங்கள் அணியில் வெற்றிப் பெறுவதற்கான திறன் இருப்பதாக நான் நம்புகிறேன். எனவே யாரும் எக்ஸ்ட்ரா அழுத்தத்தை உணர வேண்டிய அவசியமில்லை. அனைத்து அணிகளும் தங்களுடைய திறமைகளை நம்பிச் சாம்பியனாக வர விரும்புவார்கள். அந்த வகையில் எங்களுடைய தலையெழுத்தில் அல்லா என்ன எழுதியிருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது”

- Advertisement -

யாரை வேணாலும் சாய்ப்போம்:

“நாங்கள் எங்களுடையச் சிறந்த செயல்பாடுகளைக் கொடுப்பதற்காகக் கடினமாக முயற்சித்து வருகிறோம். எனவே எங்களுடைய இலக்கை நாங்கள் சாதிப்போம் என்று நம்புகிறேன். எங்கள் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 15 வீரர்களின் திறன் மீது எனக்கு மகிழ்ச்சி. எங்கள் அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களும் தனியாளாகப் போட்டியை வென்றுக் கொடுக்கும் திறமையைக் கொண்டவர்கள்”

இதையும் படிங்க: ஷார்ட் பிட்ச் பலவீனத்தை ஸ்ரேயாஸ்.. இந்த டெக்னிக் மாற்றத்தை செஞ்சு உடைச்சுட்டாரு.. சஞ்சய் பங்கர்

“முன்பை விட தற்போது எங்களிடம் வலுவான வேகப்பந்து வீச்சுத்துறை இருக்கிறது. அதே போல விரல் ஸ்பின்னர்களும் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக எங்களிடம் சமநிலையைப் பொருந்திய அணி இருக்கிறது. எனவே எந்த அணியையும் எந்த நேரத்திலும் எங்களால் வீழ்த்த முடியும்” என்று கூறினார். முன்னதாக கடந்த வருடம் பாகிஸ்தானைப் போல உங்களையும் வீழ்த்துவோம் என்று சொன்ன இதே சாண்டோ தலைமையிலான வங்கதேசம் அணியை இந்திய அணி மண்ணைக் கவ்வ வைத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -