ஷார்ட் பிட்ச் பலவீனத்தை ஸ்ரேயாஸ்.. இந்த டெக்னிக் மாற்றத்தை செஞ்சு உடைச்சுட்டாரு.. சஞ்சய் பங்கர்

Sanjay Bangar
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நிறைவு பெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. அதனால் சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதை நிரூபித்துள்ள இந்தியா சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராக இருக்கிறோம் என்பதையும் காண்பித்துள்ளது. முன்னதாக இந்தத் தொடரின் முதல் போட்டியில் விராட் கோலி முழங்காலில் சந்தித்த காயத்தால் விளையாடவில்லை.

அவருக்குப் பதிலாக வாய்ப்புப் பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன்கள் குவித்து தம்மை பெஞ்சில் அமர வைக்க நினைத்த இந்திய அணி நிர்வாகத்திற்கு பதிலடி கொடுத்தார். அதன் காரணமாக அடுத்த 2 போட்டிகளிலும் வாய்ப்புப் பெற்ற அவர் 44, 78 ரன்கள் குவித்து அசத்தினார். அதனால் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றே சொல்லலாம்.

- Advertisement -

பலவீனத்தை உடைத்த ஸ்ரேயாஸ்:

முன்னதாக ஸ்ரேயாஸ் ஐயர் உயரமான வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் ஷார்ட் பிட்ச் பந்துகளில் தம்முடைய விக்கெட்டை பரிசளித்து வந்தார். அந்த பலவீனத்தை அறிந்த எதிரணிகள் சமீப காலங்களில் அவர் வந்ததுமே அவ்வகையான பந்துகளை வீசி அவரைச் சாய்த்து வந்தன. அதனால் விமர்சனங்களை சந்தித்த ஸ்ரேயாஸ் ஐயர் இத்தொடரில் ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் போன்ற தரமான இங்கிலாந்து பவுலர்கள் வீசிய ஷார்ட் பந்துகளைச் சிறப்பாக எதிர்கொண்டு வெற்றிகரமாக செயல்பட்டார்.

இந்நிலையில் ஷார்ட் பிட்ச் பந்துகளைச் சமாளிப்பதற்காக ஸ்ரேயாஸ் ஐயர் தனது டெக்னிக்கில் மாற்றங்கள் செய்துள்ளதாக முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் பாராட்டியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “முன்பெல்லாம் ஷார்ட் பந்துகளை எதிர்கொள்ளும் போது ஸ்ரேயாஸ் அதை ஆஃப் சைட் திசையில் அடிக்க முயற்சிப்பார்”

- Advertisement -

கோச் பாராட்டு:

“ஆனால் இந்தத் தொடர் முழுவதும் அதைத் தவிர்த்துள்ள ஸ்ரேயாஸ் அந்த ஷாட்டை அடிக்க முயற்சிக்கவில்லை. அதற்கான அர்த்தம் என்ன? தற்போது அந்தப் பந்துகளுக்கு எதிராக லெக் சைட் அடிக்கக்கூடாது என்ற முடிவை எடுத்துள்ள அவர் அதற்கு பதிலாக வெள்ளைக் கோட்டுக்குள் சென்று எதிர்கொள்ள முயற்சிக்கிறார். ஒருவேளை அதை அவரால் அடிக்க முடியவில்லை எனில் தடுத்து சிங்கிள் எடுத்துக் கொள்கிறார்”

இதையும் படிங்க: ப்ளீஸ் அவரை பத்தி பேசாதீங்க.. சுப்மன் கில் நிச்சயம் அதையும் செய்து அசத்துவார் – கம்பீர் நம்பிக்கை

“இது ஷார்ட் பந்துகளை எதிர்கொள்வதற்காக அவர் கொண்டு வந்துள்ள நல்ல திட்டமாக நான் பார்க்கிறேன். அந்தத் திட்டத்தில் அவர் தன்னுடைய மண்டலத்திற்குள் இருப்பது சிறந்த விஷயமாகும். அதை அவருடைய பாடி லாங்குவேஜிலும் பார்க்க முடிகிறது” எனக் கூறினார். அந்த வகையில் 2023 உலகக்கோப்பை முதலே இந்தியாவுக்கு மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் சிறந்த பேட்ஸ்மேனாக அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement