ஐபிஎல் 2023 : என்னோட பெஸ்ட் இன்னும் வரல, ஆர்சிபி ரசிகர்களுக்கு விராட் கோலி கொடுத்த மெசேஜ் இதோ

kohli
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 21 முதல் அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்குகிறது. இந்த சீசனில் கோப்பையை வெல்வதற்காக களமிறங்கும் 10 அணிகளில் தங்களது லட்சிய முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மீண்டும் விளையாட உள்ளது. கடந்த 2008 முதல் அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி போன்ற நட்சத்திர கேப்டன்கள் தலைமையில் 2009, 2011 ஆகிய வருடங்களில் ஃபைனல் வரை சென்ற அந்த அணி முக்கிய நேரங்களில் சொதப்பி கோப்பையை கோட்டை விட்டது. அதை விட 2013 முதல் விராட் கோலி தலைமையில் கிறிஸ் கெயில், ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற நிறைய தரமான வீரர்களுடன் கோப்பையை வெல்ல போராடிய அந்த அணி 2016 ஃபைனலில் கையிலிருந்த வெற்றியை கோட்டை விட்டது.

அதே போல் முக்கிய தருணங்களில் சொதப்பிய அந்த அணி விராட் கோலி கேப்டனாக இருக்கும் வரை கோப்பை வெல்ல முடியாது என்ற விமர்சனங்கள் எழுந்தன. போதாக்குறைக்கு 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்ததால் கடந்த வருடம் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்த விராட் கோலி தென்னாப்பிரிக்காவின் டு பிளேஸிஸ் தலைமையில் சாதாரண வீரராக விளையாடினார். அப்படி கேப்டன்ஷிப் அழுத்தம் இல்லாமல் சுதந்திர பறவையாக விளையாடிய அவர் அபாரமாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அனைவருக்கும் மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது.

- Advertisement -

பெஸ்ட் இனிமேல் தான்:
ஏனெனில் வரலாற்றில் முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் கோல்டன் டக் அவுட்டாகி மோசமாக செயல்பட்ட அவர் மீண்டும் விமர்சனங்களை சந்தித்தார். இருப்பினும் மனம் தளராமல் 2022 ஆசிய கோப்பையில் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து அதே வேகத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அபாரமாக செயல்பட்டு சமீபத்திய இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக நடந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் சதமடித்துள்ள அவர் முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ளது இம்முறை பெங்களூரு அணிக்கும் பெரிய பலமாக மாறியுள்ளது.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களில் விளையாடி நல்ல அமைதியான மனநிலையுடன் ஃபார்முக்கு திரும்பியுள்ள தம்முடைய சிறந்த செயல்பாடுகள் இன்னும் வெளிப்படவில்லை என்று கூறியுள்ள விராட் கோலி அது 2023 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக வெளிப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ஆர்சிபி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் எப்படி விளையாடுவேனோ அந்த வழிக்கு மீண்டும் தற்போது திரும்பியுள்ளேன். இருப்பினும் இன்னும் முழுமையாக வெளிப்படாமல் இருக்கும் என்னுடைய சிறந்த செயல்பாடுகள் இந்த 2023 ஐபிஎல் தொடரில் வெளிப்படும் என்று நம்புகிறேன்”

- Advertisement -

“ஒருவேளை நான் விரும்பும் லெவலில் என்னால் விளையாட முடிந்தால் என்னுடைய அணிக்கு பெரிய அளவில் உதவி செய்ய முடியும். அது மிகவும் ஆவலாக இருக்கும். இவை அனைத்தும் நான் விரும்பும் விளையாட்டில் என்னை மீட்டெடுப்பதை பொறுத்ததாகும். கடந்த காலங்களில் நான் முற்றிலும் சோர்வடைந்து விட்டேன். முதலில் ஒரு மனிதனாக என்னுடன் என்னை இணைத்திருக்க வேண்டும். மாறாக என்னை தொடர்ந்து மதிப்பிடாமல் எல்லா நேரத்திலும் ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்”

“மேலும் நீண்ட நாட்கள் கழித்து பெங்களூருவில் விளையாடுவது மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள் எங்களை பார்க்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அங்கே அவர்களுக்கு முன்னிலையில் அனைத்து வீரர்களும் இணைந்து விளையாடுவது மிகவும் ஸ்பெஷலாகும். அது நினைவில் வைத்துக் கொள்ளக் கூடிய மிகச்சிறந்த நாட்களாக இருக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:ஆசியக்கோப்பை : இந்தியா விளையாடியே ஆகனும் என்பதால் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு -இதுவும் கரெக்ட் தான்

அந்த வகையில் ஆசியக் கோப்பை சதமடித்த பின் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அசாத்தியமான வெற்றியைப் பெற்றுக் கொடுத்த விராட் கோலி தற்போது தான் 3 வகையான கிரிக்கெட்டிலும் சதங்களை அடித்து பழைய ஃபார்முக்கு திரும்ப துவங்கியுள்ளார். எனவே அவருடைய முழுமையான பழைய ஃபார்ம் இந்த ஐபிஎல் தொடரில் வெளிவருவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பது பெங்களூரு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement