ஆசியக்கோப்பை : இந்தியா விளையாடியே ஆகனும் என்பதால் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு -இதுவும் கரெக்ட் தான்

- Advertisement -

16-ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த ஆசிய கோப்பை தொடருக்கான போட்டிகளில் ஆறு அணிகள் பங்கேற்கும் என்றும், இந்த தொடரானது 50 ஓவர் உலக கோப்பையை கருத்தில் கொண்டு 50 ஓவர் போட்டியாக இம்முறை நடத்தப்படுகிறது. இந்த ஆசிய கோப்பைத் தொடர் பாகிஸ்தான் மண்ணில் நடைபெறும் என்பதால் இந்தியா அங்கு சென்று விளையாடுது என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியது.

IND vs PAK Babar Azam Rohit Sharma

- Advertisement -

அதோடு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் மற்றும் ஆசிய கிரிக்கெட் வாரிய தலைவருமான ஜெய் ஷாவும் இந்தியா ஆசிய கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் சென்று விளையாடாது என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அதோடு ஆசிய கோப்பை தொடரையும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கருத்தினையும் அவர் வலியுறுத்தி இருந்தார்.

இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மேலும் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்கப்பட்டால் இந்தியா நடத்தும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியிருந்தது.

IND vs PAK Hardik Pandya Dinesh Kathik Rizwan

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை மற்றும் பேச்சு வார்த்தை நடைபெற்ற வேளையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையேயான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆசிய கோப்பை போட்டியை எவ்வாறு? எங்கு நடத்துவது? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

- Advertisement -

அதில் இந்தியா மோதும் போட்டிகளை மட்டும் பாகிஸ்தானில் நடத்தாமல் பொதுவான ஒரு இடத்தில் நடத்தலாம் என்று விவாதிக்கப்பட்டது. இதன் காரணமாக ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானில் நடத்தவும், இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை மட்டும் பொதுவாக இலங்கை, ஐக்கிய அரபுமிரேட்ஸ், வங்கதேசம் அல்லது ஓமன் ஆகிய நாடுகளில் ஏதாவது ஒரு இடத்தில் நடத்த முடிவு செய்யப்படலாம் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : தோத்துடுவோம்னு எங்க நாட்டுக்கு வர பயப்படுறாங்க – இந்தியாவை வெளிப்படையாக விமர்சிக்கும் முன்னாள் பாக் வீரர்

மேலும் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறும் பட்சத்தில் அந்த இறுதி போட்டிக்கான ஆட்டமும் பொதுவான இடத்திலேயே நடைபெறும் என்று தெரிகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement