தோத்துடுவோம்னு எங்க நாட்டுக்கு வர பயப்படுறாங்க – இந்தியாவை வெளிப்படையாக விமர்சிக்கும் முன்னாள் பாக் வீரர்

Babar Azam Rohit Sharma IND vs PAK
- Advertisement -

2023 ஆசிய கோப்பை விவகாரம் கடந்த சில மாதங்களாகவே ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையே அனல் பறந்து வருகிறது. எல்லை பிரச்சினை காரணமாக ஏற்கனவே இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்ட இவ்விரு நாடுகளும் ஆசிய மற்றும் ஐசிசி உலக கோப்பைகளில் மட்டுமே மோதி வருகின்றன. அந்த நிலையில் எல்லை பிரச்சினை காரணமாக இந்திய அரசின் அனுமதி இல்லாமல் பாகிஸ்தானில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பையில் இந்தியா பங்கேற்காது என்று அறிவித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதை பொதுவான இடத்தில் நடத்துவதற்கு தேவையான அழுத்தம் கொடுக்கப்படும் என்று கூறினார்.

Jay Shah IND vs PAk

- Advertisement -

ஆனால் ஆசிய கவுன்சில் தலைவராக இருக்கும் நீங்கள் தங்களிடம் கேட்காமல் இப்படி அறிவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த பாகிஸ்தான் வாரியம் எங்களது நாட்டுக்கு வராமல் போனால் வரும் அக்டோபர் மாதம் உங்களது நாட்டில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பையில் பங்கேற்க நாங்களும் வரமாட்டோம் என்று அதிரடியாக தெரிவித்தது. இருப்பினும் இப்படி பாகிஸ்தான் என்ன பேசினாலும் ஆசிய கவுன்சில் மற்றும் ஐசிசிக்கு அதிக வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் இந்தியாவை எதுவும் செய்ய முடியாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஆசிய கவுன்சிலுக்கே தலைவராக இருக்கும் ஜெய் ஷா எடுக்கும் முடிவே இந்த விவகாரத்தில் இறுதியாக இருக்கும் என்றும் வல்லுனர்கள் நம்புகிறார்கள்.

தோல்வி பயம்:
இந்நிலையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகள் தங்களது நாட்டில் வந்து எந்த பாதுகாப்பு பிரச்சினைகளும் இல்லாமல் விளையாடி செல்வதாக தெரிவிக்கும் முன்னாள் வீரர் இம்ரான் நசீர் பாகிஸ்தான் மண்ணில் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு முன்னிலையில் தோற்று விடுவோம் என்ற பயத்தாலேயே தங்களது நாட்டுக்கு இந்தியா வர மறுப்பதாக பகிரங்கமாக பேசியுள்ளார். இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “பாதுகாப்பை குறையாக கூறுவதற்கு இங்கே எந்த காரணமும் கிடையாது. ஏனெனில் பாகிஸ்தானுக்கு எத்தனை வெளிநாட்டு அணிகள் வந்து பாதுகாப்புடன் விளையாடி செல்வதை பாருங்கள்”

“ஏ அணிகளை விடுங்கள். ஆஸ்திரேலியா போன்ற முதன்மையான அணியே பாகிஸ்தானுக்கு வந்து விளையாடி சென்றுள்ளது. எனவே இவை அனைத்தும் மூடி மறைப்பதற்கான பேச்சுக்களாகும். ஆனால் உண்மை என்னவெனில் பாகிஸ்தானுக்கு ஆசியக் கோப்பையில் பங்கேற்பதற்காக இந்தியா வர மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் தோல்விக்கு பயப்படுகிறார்கள். அதனாலேயே அவர்கள் பாதுகாப்பை வெறும் காரணமாக சொல்கிறார்கள். தைரியம் இருந்தால் எங்கள் நாட்டுக்கு வந்து கிரிக்கெட் விளையாடுங்கள். ஆனால் அரசியலில் விளையாடும் போது எதுவும் செய்ய முடியாது”

- Advertisement -

“மக்கள் அனைவரும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதுவதை பார்க்க விரும்புகிறார்கள். ஏனெனில் அந்த போட்டிகளில் வித்தியாசமான ஆர்வம் இருக்கும். இதை இந்த உலகமே அறியும். குறிப்பாக கிரிக்கெட் வீரர்களான நாங்களும் உலகில் உள்ள அனைத்து வீரர்களும் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் நடைபெறுவதை விரும்புகிறோம். முன்பெல்லாம் நாங்கள் அதிகமாக விளையாடினோம். அவர்கள் ஒரு சமநிலையான தேனீர். ஆனால் இந்தியாவால் தோல்வியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இது ஒரு விளையாட்டு என்பதையும் அதில் சிலவற்றில் வெல்வீர்கள் சிலவற்றின் தோற்பீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்.

Imran Nazir 2

அதாவது 2021 டி20 உலக கோப்பையில் வரலாற்றில் முதல் முறையாக தங்களிடம் தோல்வியை சந்தித்த இந்தியா அதே துபாயில் கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய கோப்பையில் ஒருமுறை தோற்ற தோல்வியை ஜீரணிக்க முடியாமலேயே 2023 ஆசியக் கோப்பையில் பங்கேற்க மறுப்பு தெரிவிப்பதாக இம்ரான் நசீர் கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தான் மண்ணில் தோற்பதை இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற காரணத்தாலேயே பாதுகாப்பை காரணமாக காட்டி மலுப்புவதாகவும் அவர் வெளிப்படையாக கலாய்த்துள்ளார்.

இதையும் படிங்க:டெயில் எண்டர் கூட இப்டி அவுட்டாக மாட்டாங்க, உ.கோ’யில் சூர்யாவுக்கு பதில் அவருக்கு சான்ஸ் கொடுங்க – வாசிம் ஜாபர் கோரிக்கை

இருப்பினும் சமீபத்திய பிஎஸ்எல் தொடரின் கண்காட்சி போட்டியில் கராச்சி மைதானத்திற்கு அருகே பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிகழ்வு நடந்ததால் பாபர் அசாம், ஷாஹித் அப்ரிடி போன்ற வீரர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டு போட்டியும் பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் காரணமாகவே பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்பக்கூடாது என்று ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் இந்திய வீரர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement