டெயில் எண்டர் கூட இப்டி அவுட்டாக மாட்டாங்க, உ.கோ’யில் சூர்யாவுக்கு பதில் அவருக்கு சான்ஸ் கொடுங்க – வாசிம் ஜாபர் கோரிக்கை

Suryakumar YAdav wasim Jaffer
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த இந்தியா 2019க்குப்பின் சொந்த மண்ணில் தொடர்ந்து 4 வருடங்களாக 26 தொடர்களுக்கு பின் முதல் முறையாக தொடரை இழந்து ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தையும் இழந்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற இத்தொடரில் இந்தியா இப்படி தோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதை விட ஷ்ரேயாஸ் ஐயர் இடத்தில் வாய்ப்பு பெற்ற சூரியகுமார் யாதவ் 3 போட்டிகளிலும் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானது ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் அமைந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் 2021இல் அறிமுகமானது முதல் டி20 கிரிக்கெட்டில் பெரும்பாலான போட்டிகளில் சூழ்நிலை எப்படி இருந்தாலும் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே எதிரணி பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கி பெரிய ரன்களை குவிக்கும் அவர் நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்து குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் முன்னேறியுள்ளார். குறிப்பாக எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அதிரடியாக ரன்களை குவிக்கும் அவரை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கொண்டாடுகிறார்கள்.

ஹாட்ரிக் கோல்டன் டக்:
இருப்பினும் சற்று நிதானத்துடன் விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே தடுமாறி வரும் அவர் கடந்த 14 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. அத்துடன் டி20 கிரிக்கெட்டில் அசால்ட்டாக 3 சதங்களை அடித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை ஒரு சதம் கூட அடிக்காமல் 24.05 என்ற மோசமான சராசரியில் பேட்டிங் செய்து வருகிறார். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு இவர் செட்டாக மாட்டார் என்று விமர்சிக்கும் ரசிகர்கள் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கோரிக்கை வைக்கிறார்கள்.

Sanju Samson

ஏனெனில் ஆரம்பம் முதலே நிலையற்ற வாய்ப்புகளை பெற்று வரும் அவர் கடந்த வருடம் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி இதுவரை 11 போட்டிகளில் 330 ரன்களை 66 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ளார். மறுபுறம் சூரியகுமார் யாதவ் 23 போட்டிகளில் 432 ரன்களை 24.05 என்ற சுமாரான சராசரியில் எடுத்து வருகிறார். இந்நிலையில் 11வது இடத்தில் களமிறங்கும் டெயில் எண்டர் பேட்ஸ்மேன் கூட 3 போட்டிகளில் கோல்டன் டக் அவுட்டாக மாட்டார் என்று தெரிவிக்கும் வாசிம் ஜாபர் துரதிஷ்டவசமாக சூரியகுமார் யாதவ் இந்த சாதனையை படைத்துள்ளதாக கூறியுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் 2023 உலக கோப்பையை முன்னிட்டு இனிமேல் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் 2023 ஐபிஎல் தொடரில் அசத்தலாக செயல்பட்டால் மட்டுமே மேற்கொண்டு சூரியகுமாருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவருக்காக வேண்டுமானால் நான் அனுதாபப்படுவேன். உலகில் 11வது இடத்தில் களமிறங்கும் பேட்ஸ்மேனுக்கு கூட இது நடந்திருக்காது. குறிப்பாக தொடர்ந்து அடுத்தடுத்த 3 போட்டிகளில் கோல்டன் டக் அவுட்டானது மிகவும் மோசமானது. இருப்பினும் இனிமேல் அவரது கேரியரில் அது நடக்காது என்று நம்புகிறேன்”

Sanju Samson Wasim Jaffer

“அது அவருடைய துரதிஷ்டவசமாகும். ஆனால் இனிமேல் இந்தியா வேறு வீரர்களை பார்க்க வேண்டிய நிலை வந்துள்ளது. நல்ல தரமான வீரரான அவருக்கு சாதகமாக விரைவில் ஐபிஎல் நடைபெறுகிறது. ஆனால் இனிமேல் இந்தியா சஞ்சு சாம்சன் அல்லது அவரைப் போன்ற வீரரை பார்க்க வேண்டும். இதுவரை சூரியகுமார் தரமான வீரர் என்ற காரணத்தாலேயே அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது”

இதையும் படிங்க:IPL 2023 : ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலா புதிய கேப்டன் இவர்தானா? – நிர்வாகத்தின் ஸ்க்ரீன் ஷாட்டால் ஏற்பட்ட பரபரப்பு

“எனவே இதிலிருந்து மீண்டு வந்தால் அவர் எந்தளவுக்கு தரமான வீரர் என்பதை நாம் அறிவோம். மேலும் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் அவரை மீண்டும் பயன்படுத்த இந்தியா நினைக்கலாம். ஆனால் அதற்கு முன்பாக இந்தியா சஞ்சு சாம்சனை பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement