இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் தற்போது 16-வது சீசனானது மார்ச் 31-ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் வேளையில் இந்த தொடரில் இடம் பிடித்த சில வீரர்கள் காயம் காரணமாக வெளியேறி வருவது அனைத்து அணிகளுக்கும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளின் போது முதுகுப் பகுதியில் அசவுகரித்தை உணர்ந்ததாக அணி நிர்வாகத்திடம் அவர் தெரிவித்தார். அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகிய அவர் சிகிச்சைக்காக லண்டனுக்கு செல்லவிருக்கிறார் என்றும் அதன் காரணமாக அவர் எதிர்வரும் ஐபிஎல் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியையும் அவர் தவறவிடுகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கொல்கத்தா அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறவில்லை என்றால் புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்கள் என்கிற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.
அந்த வகையில் ஏற்கனவே சுனில் நரேன், டிம் சவுதி, ஆண்ட்ரே ரசல் போன்ற அனுபவ வீரர்களால் இருப்பதனால் அவர்களில் ஒருவர் தான் கேப்டனாக நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் சார்பில் வெளியான ஒரு ஸ்கிரீன் ஷாட்டின் மூலம் அந்த அணிக்கு புதிய கேப்டன் ரிங்கு சிங் தான் என்பது உறுதியாகி உள்ளது.
ஏனெனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரிங்கு சிங் பயிற்சி செய்யும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்த வேளையில் அதற்கு ஒரு ரசிகர் கேம் சேஞ்சர் என்று தனது கருத்தினை அந்த வீடியோ பதிவில் வெளிப்படுத்தினார். அந்த ரசிகரின் கருத்திற்கு பதிலளித்த கொல்கத்தா அணியின் நிர்வாகம் : அவர் தான் ஸ்கிப்பர் என்று “அவர்தான் தங்களுடைய கேப்டன்” என்று உறுதி செய்துள்ளது.
இதையும் படிங்க : என்னுடைய சாப்பிட்டில் விஷம் கலந்து கொடுத்துட்டாங்க. அப்ரிடி தான் என்னை காப்பாத்துனாரு – பாக் வீரர் நெகிழ்ச்சி
இது குறித்த ஸ்கிரீன் ஷாட் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதால் ரிங்கு சிங் தான் கேப்டனோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக 7 போட்டிகளில் விளையாடிய அவர் லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 15 பந்துகளில் 40 ரன்கள் குவித்து அதிரடி காட்டியது குறிப்பிடத்தக்கது.