என்னுடைய சாப்பிட்டில் விஷம் கலந்து கொடுத்துட்டாங்க. அப்ரிடி தான் என்னை காப்பாத்துனாரு – பாக் வீரர் நெகிழ்ச்சி

Imran-Nazir
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான இம்ரான் நசீர் கடந்த 1999-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமாகி 8 டெஸ்ட் போட்டிகள் 79 ஒருநாள் போட்டிகள் மற்றும் 25 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி உள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னை விஷம் வைத்து கொல்ல முயன்றதாக கூறியுள்ள தகவல் தற்போது இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Imran Nazir 1

- Advertisement -

இதுகுறித்து சமீபத்தில் பேட்டி அளித்த இம்ரான் நசீர் கூறுகையில் : எனக்கு மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. என்னுடைய மருத்துவ அறிக்கையில் எனக்கு விஷம் கொடுத்திருப்பதாக தெரியவந்தது. என்னுடைய உணவில் மெர்குரி என்கிற திரவத்தை யாரோ சேர்த்து இருக்கிறார்கள்.

இது கொஞ்சம் கொஞ்சமாக நமது உடல் உறுப்புகளை பாதிக்க வைக்கும். இதன் காரணமாக எலும்பு மூட்டுகளும் தேய்மானம் அடையும். இந்த ஒரு பிரச்சினையால் நான் ஆறு ஆண்டுகாலம் அவதிப்பட்டு வந்தேன். படுத்த படுக்கையிலேயே காலத்தை தள்ளி விடக்கூடாது என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்.

Imran Nazir 2

நான் தற்போது தீவிர சிகிச்சைக்கு பிறகு மெல்ல மெல்ல நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறேன் என்று இம்ரான் நசீர் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நான் சாப்பிட்ட உணவில் உள்ள விஷம் உடனடியாக பாதிக்காது என்றும் பல ஆண்டுகள் கழித்து தான் என்னை மெல்ல மெல்ல பாதிக்கும் என்று யாரோ திட்டமிட்டு செய்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஏன் அவ்வாறு என்னை கொல்ல முயற்சித்தார்கள்? என்று தெரியவில்லை. இதன் காரணமாக நான் சேமித்து வைத்திருந்த பணம் அனைத்தும் மருத்துவ செலவிற்கு தீர்ந்து விட்டது. என்னுடைய இந்த நிலைமையை அறிந்த சாகித் அப்ரிடி எனக்காக 40-50 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தார். மேலும் என்னுடைய மருத்துவருக்கு அப்ரிடி தினமும் பணத்தை அனுப்பிவிடுவார்.

இதையும் படிங்க : ப்ளீஸ் சூரியகுமார் யாதவோட அவரை ஒப்பிடாதீங்க. இது டீம் மேனேஜ்மென்ட்டோட முடிவு – கபில் தேவ் விளக்கம்

எவ்வளவு பணம் செலவாகினாலும் என்னுடைய சகோதரன் எனக்கு மீண்டும் கிடைக்க வேண்டும் என்று மட்டுமே அவர் மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த உதவியை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவரால் தான் தற்போது நான் மீண்டு வந்திருக்கிறேன் என இம்ரான் நசீர் நெகிழ்ச்சியாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement