ப்ளீஸ் சூரியகுமார் யாதவோட அவரை ஒப்பிடாதீங்க. இது டீம் மேனேஜ்மென்ட்டோட முடிவு – கபில் தேவ் விளக்கம்

Kapil-Dev
- Advertisement -

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சூரியகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரது பெயர்தான் தற்போது சமூக வலைதளத்தில் அதிகளவு பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சூரியகுமார் யாதவ் 3 போட்டிகளிலுமே தான் சந்தித்த முதல்பந்தில் ஆட்டம் இழந்து வெளியேறி ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்தார். தனக்கு கிடைத்த இந்த வாய்ப்புகளை தவறவிட்ட அவர் மீது தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

SKY 1

- Advertisement -

டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை உலகின் நம்பர் ஒன் வீரராக திகழ்ந்து வரும் சூரியகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளில் இப்படி அடுத்த அடுத்த போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து திணறி வருவது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறும் சூரியகுமார் யாதவுக்கு பதிலாக அந்த இடத்தில் சிறப்பாக செயல்படும் சஞ்சு சாம்சனை மீண்டும் அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் கருத்துக்கள் எழுந்து வருகின்றன.

இந்த விவகாரம் தற்போது முடிவில்லாமல் பேசப்பட்டு வரும் விடயமாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் : சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியவரை ஒப்பிட்டு பேச வேண்டாம் என்றும் இது அணி நிர்வாகத்தின் முடிவு என்றும் வெளிப்படையான தனது கருத்தினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Samson

ஒரு வீரர் நன்றாக விளையாடினால் அவருக்கு அதிகப்படியான வாய்ப்புகளை வழங்க வேண்டும். அந்த வகையில் தான் சூரியகுமார் யாதவுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே சூரியகுமார் யாதவையும் சஞ்சு சாம்சனையும் ஒப்பிட வேண்டாம் இருவரும் வெவ்வேறு விதமான திறமையான வீரர்கள் தான் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் தற்போது சூரியகுமார் யாதவ் அணியின் நம்பிக்கையை பெற்றுள்ளதால் அதிக வாய்ப்புகளை பெறுகிறார்.

- Advertisement -

இது நிச்சயம் அணி நிர்வாகத்தினுடைய முடிவு தான். அதனால் அவரது இடம் குறித்த விமர்சனங்களை எழுப்ப வேண்டாம் என கூறியுள்ளார். அதுமட்டும் இன்றி போட்டி முடிந்த பின்னர் ஒருவர் குறித்து எளிதாக பேசிவிடலாம். ஆனால் போட்டியில் என்ன நடக்கிறது என்பது நம்மால் கணிக்க இயலாது. சூரியகுமார் யாதவ் முதல் இரண்டு போட்டிகளிலும் விரைவிலேயே ஆட்டம் இழந்ததால் தான் மூன்றாவது போட்டியில் ஏழாவது வீரராக ஃபினிஷர் ரோலில் இறக்கப்பட்டார். இது இந்திய அணியில் புதிது கிடையாது.

இதையும் படிங்க : அப்றம் உங்க இஷ்டம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெல்ல அந்த இந்திய வீரர் கண்டிப்பா விளையாடனும் – ரவி சாஸ்திரி அதிரடி

ஏற்கனவே இதுபோன்று தடுமாறும் வீரர்களை இந்திய அணி சற்று இடம்மாற்றி அனுப்பும். அந்த வகையில் தான் அவர் இடம் பேட்டிங் வரிசை மாற்றி அனுப்பப்பட்டார். இந்த போட்டியில் அவர் சோபிக்க தவறினாலும் நிச்சயம் அவரது திறனை வெளிக்கொணர்வார் எனவே சூரியகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சனை யாரும் ஒப்பிட்டுப் பேச வேண்டாம் என கபில் தேவ் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement