அப்றம் உங்க இஷ்டம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெல்ல அந்த இந்திய வீரர் கண்டிப்பா விளையாடனும் – ரவி சாஸ்திரி அதிரடி

Ravi-Shastri
- Advertisement -

இங்கிலாந்தில் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஜூன் 7 முதல் 11 வரை 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி நடைபெறுகிறது. வரலாற்றின் 2வது டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கும் இந்த போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் கோப்பையை வெல்வதற்காக மோத உள்ளன. அதில் கடந்த ஃபைனலில் நியூசிலாந்திடம் தோற்ற இந்தியா இம்முறை எப்படியாவது சிறப்பாக செயல்பட்டு 2013க்குப்பின் ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க போராட உள்ளது.

KL-Rahul

- Advertisement -

இருப்பினும் அந்த போட்டியில் ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் 2 சதங்களை அடித்து தோனியால் முடியாத சாதனைகளை படைத்துள்ள ரிசப் பண்ட் இடத்தில் விளையாடப் போவது யார் என்ற கேள்வி நிலவுகிறது. அந்த இடத்தில் சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் வாய்ப்பு பெற்ற கேஎஸ் பரத் இந்திய மைதானங்களிலேயே சுமாராக விக்கெட் கீப்பிங் செய்து பேட்டிங்கில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் ஏமாற்றமான செயல்பாடுகள் வெளிப்படுத்தினார்.

அதனால் 2018ஆம் ஆண்டு இதே லண்டன் ஓவல் மைதானத்தில் சதமடித்து 149 ரன்களும் 2021ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதும் வென்ற கேஎல் ராகுல் ஸ்விங் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் ஏற்கனவே நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளதால் ஃபைனலில் பரத்துக்கு பதிலாக விக்கெட் கீப்பராக விளையாட வேண்டும் என்று தினேஷ் கார்த்திக், ரவி சாஸ்திரி, சுனில் காஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.

Gautam Gambhir

அப்றம் உங்க இஷ்டம்:
இருப்பினும் 4 போட்டியில் வைத்து ஒரு இளம் வீரரின் திறமையை எப்படி நீங்கள் முடிவு செய்தீர்கள் என்று விளாசிய கெளதம் கம்பீர் பகுதி நேர விக்கெட் கீப்பர் ஒரு கேட்ச் விட்டால் கூட அது வெற்றியை பறித்து விடும் என்பதால் கேஎஸ் பரத் விக்கெட் கீப்பராக விளையாட வேண்டும் என்று பதிலடி கொடுத்ததுடன் வேண்டுமானால் ராகுலை பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுங்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில் யார் என்ன சொன்னாலும் ஃபைனலில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக விளையாடுவது இந்திய அணியின் பேட்டிங்கையும் வலுப்படுத்தி வெற்றிக்கு வழி வகுக்கும் என்று ரவி சாஸ்திரி மீண்டும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “கேஎல் ராகுல் நிச்சயமாக விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டும். அதில் எந்த குழப்பமும் இல்லை. ஏனெனில் இங்கிலாந்தில் நீங்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிக விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டிய அவசியமில்லை. மேலும் 5 அல்லது 6வது இடத்தில் அவர் நம்முடைய பேட்டிங்கை வலுப்படுத்தி விக்கெட் கீப்பிங்கும் செய்வார். அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விக்கெட் கீப்பிங் செய்ய முடியும். ஏனெனில் நீங்கள் அனைத்து வகையான வலுவையும் பார்க்க வேண்டும்”

Shastri

“குறிப்பாக ரிஷப் பண்ட் போன்ற விக்கெட் கீப்பர் உங்களிடம் தற்போது அணியில் இருந்தால் ராகுலுக்காக அவரை நீக்க முடியாது என்ற நிலைமை இல்லை. அத்துடன் கேஎஸ் பரத் தற்போது தான் புதியவராக இருப்பதால் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. எனவே இந்த ஒரு மிகப்பெரிய போட்டியில் நீங்கள் அனைத்து பலத்தையும் சிந்தித்து எடை போட்டு செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:வீடியோ : முக்கிய நேரத்தில் ஹாட்ரிக் எடுத்த பவுலர் சாதனை, 1 ரன் வித்யாசத்தில் ஜிம்பாப்வே பரபரப்பான த்ரில் வெற்றி

முன்னதாக சுமாரான பார்மில் தடுமாறி வரும் ராகுல் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்து டாப் ஆர்டர் சொதப்பிய போது 75* ரன்கள் குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். எனவே நல்ல முன்னேற்றத்தை கண்டு வரும் அவர் தொடர்ச்சியாக விக்கெட் கீப்பிங் செய்ய துவங்கியுள்ளதால் கேட்ச் விடுவதற்கான வாய்ப்புகளும் முன்பை விட தற்போது குறைந்து வருகிறது. அதனால் ரிஷப் பண்ட் போன்றவரின் இடத்தில் கேஎல் ராகுல் தான் விளையாட வேண்டுமென ரவி சாஸ்திரி மீண்டும் உறுதியாக கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement