ஹைதராபாத்தில் பாக் அணியை வரவேற்றது இந்திய ரசிகர்கள் இல்ல.. கதையே வேற.. முஸ்தக் அஹமத் சர்ச்சை பேச்சு

Mushtaq Ahmad
- Advertisement -

ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஹைதராபாத் நகருக்கு வந்தது. எல்லை பிரச்சினை காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கடந்த 10 வருடங்களாக இரு தரப்பு தொடர்களில் மோதுவதை நிறுத்தி விட்டு ஆசிய மற்றும் ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன.

அந்த வகையில் கடைசியாக இந்திய மண்ணில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விளையாடிய பாகிஸ்தான் அணியினர் 7 வருடங்கள் கழித்து மீண்டும் வந்துள்ளார்கள். சொல்லப்போனால் பாபர் அசாம், முகமது ரிஸ்மான், ஷாஹீன் அப்ரிடி உள்ளிட்ட தற்போதைய பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை பெறாத காரணத்தால் தங்களுடைய வாழ்வில் முதல் முறையாக இப்போது தான் இந்தியாவுக்கு வந்துள்ளார்கள்.

- Advertisement -

வரவேற்பின் பின்னணி:
அந்த சூழ்நிலையில் அனைத்து வழிகளிலும் தங்களுக்கு எதிராக நடந்து வரும் இந்தியாவுக்கு இத்தனை வருடங்கள் கழித்து செல்லும் பாகிஸ்தான் வீரர்களுக்கு எம்மாதிரியான வரவேற்பு கொடுக்கப்படும் என்று அந்நாட்டை சேர்ந்தவர்கள் சற்று தயக்கமாக இருந்தனர். ஆனால் எப்போதுமே நம்பி வந்த விருந்தினர்களை பாதுகாப்பாக உபசரிக்க தவறாத கலாச்சாரத்தை கொண்டுள்ள இந்தியர்கள் ஹைதராபாத் நகருக்கு வந்தடைந்த பாகிஸ்தான் வீரர்களுக்கு அமோகமான வரவேற்பு கொடுத்தனர்.

குறிப்பாக இந்திய வீரர்களுக்கு நிகராக விமான நிலையத்தில் ஆரவாரமாக கூச்சலிட்டு பேருந்தில் ஏறி செல்லும் வரை சாலைகளின் இருபுறத்திலும் ஹைதராபாத் ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவு கொடுத்தனர். அதே போல பிசிசிஐ சார்பில் பன்னீர் தெளித்து கழுத்தில் துண்டு, மாலை போட்டு பாரம்பரிய முறைப்படி பாகிஸ்தான் வீரர்களுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

அதனால் நெகிழ்ச்சியடைந்த பாபர் அசாம், முகமது ரிஸ்வான் போன்ற பாகிஸ்தான் வீரர்கள் உலகக் கோப்பை வென்றால் கராச்சியில் எம்மாதிரியான ஆதரவு கிடைக்குமோ அதே போன்ற ஆதரவை ஹைதெராபாத் ரசிகர்கள் கொடுத்ததாக நன்றி தெரிவித்தனர். இந்நிலையில் ஹைதராபாத், அகமதாபாத் போன்ற நகரங்களில் அதிகப்படியான முஸ்லிம் மக்கள் இருப்பதாலேயே பாகிஸ்தான் அணிக்கு பெரிய ஆதரவு கிடைக்கும் என முன்னாள் வீரர் முஸ்டக் அகமது சர்ச்சையாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: 2011 வேர்ல்டுகப் பைனல்ஸ் அப்போ நான் என்ன பண்ணிட்டு இருந்தேன் தெரியுமா? – ஜடேஜா பேட்டி

இது பற்றி பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அகமதாபாத், ஹைதராபாத் போன்ற இந்திய நகரங்களில் முஸ்லிம் மக்கள் தொகை சற்று அதிகமாக இருக்கும். அதனாலேயே அங்கு பாகிஸ்தான் அணிக்கு நீங்கள் அதிக ஆதரவு கிடைப்பதை பார்க்கிறீர்கள். குறிப்பாக அவர்கள் தான் விமான நிலையத்திலும் சாலைகளிலும் பாகிஸ்தான் வீரர்களுக்கு பெரிய வரவேற்பு கொடுத்தார்கள்” என்று கூறினார்.

Advertisement