நான் எப்போ பேட்டிங் செய்ய வந்தாலும் விராட் கோலி என்னை ஸ்லெட்ஜிங் செய்வார். ஏன் தெரியுமா? – முஷ்பிகுர் ரஹீம் பேட்டி

Rahim-and-Kohli
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற இருக்கும் 17-வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில் ஏற்கனவே மூன்று வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணியானது இன்று நான்காவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் முன்னேற முயற்சிக்கும். அதே போன்று வங்கதேச அணியும் தங்களது வெற்றிக்காக போராடும் என்பதனால் இன்றைய போட்டியில் போட்டி நடைபெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணிக்கு எதிராக விளையாட இருக்கும் வங்கதேச வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வேளையில் இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி தன்னை எப்போதுமே ஸ்லெட்ஜிங் செய்ய முயற்சிப்பார் என வங்கதேச அணியின் அனுபவ வீரரான முஷ்பிகுர் ரஹீம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

சர்வதேச கிரிக்கெட்டில் சில பேட்ஸ்மேன்கள் ஸ்லெட்ஜிங் செய்வதை விரும்புவார்கள். ஏனென்றால் அது போட்டிகளின் போது அவர்களுக்கு உத்வேகத்தை தரும். அந்த வகையில் விராட் கோலி எப்பொழுதுமே எதிரணியினர் ஸ்லெட்ஜிங் செய்வதை விரும்புவார். ஆனால் நான் எப்போதும் அவரை ஸ்லெட்ஜிங் செய்ய மாட்டேன்.

- Advertisement -

ஏனெனில் ஒருமுறை அவரை ஸ்லெட்ஜ் செய்து விட்டால் அதனை உந்துதலாக எடுத்து அவர் எங்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த விரும்புவார். அதே போன்று எங்களது பவுலர்களிடமும் நான் எவ்வளவு விரைவாக அவரது விக்கெட்டை வீழ்த்த முடியுமோ அவ்வளவு விரைவாக அவரை வீழ்த்துமாறு கூறுவேன். மேலும் நான் எப்பொழுதெல்லாம் இந்திய அணிக்கு எதிராக பேட்டிங் செய்ய களத்திற்கு வருகிறானோ அப்போதெல்லாம் விராட் கோலி என்னை ஸ்லெட்ஜ் செய்வார்.

இதையும் படிங்க : ஆப்கனிஸ்தான் அணிக்கெதிராக நாங்கள் பெற்ற வெற்றிக்கு அவரோட சிறப்பான ஆட்டம் தன காரணம் – டாம் லேதம் பேட்டி

ஏனெனில் அவர் உண்மையிலேயே ஒரு போட்டியாளர். ஒரு போட்டியில் கூட நாம் தோற்கக் கூடாது என்று விரும்புவர். அவருக்கும் எனக்கும் இடையேயான மோதல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதோடு இந்திய அணியை எதிர்த்து விளையாடும் போது நான் சவால் நிறைந்த அழுத்தமான வேலைகளிலும் சிறப்பாக செயல்பட விரும்புபேன் என முஷ்பிகுர் ரஹீம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement