- Advertisement -
ஐ.பி.எல்

கொடுத்ததும் அழுதுட்டேன்.. சர்பராஸ் கொடுத்த விராட் பாய் பரிசால் தான் இவ்வளவு வளந்துருக்கேன்.. முஷீர் கான்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 20ஆம் தேதி முள்ளான்பூரில் 37வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பஞ்சாப்பை பெங்களூரு அணி தோற்கடித்து தங்களுடைய ஐந்தாவது வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 73* ரன்கள் அடித்து நங்கூரமாக விளையாடி முக்கிய பங்காற்றியதால் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

அந்தப் போட்டி முடிந்ததும் விராட் கோலியை பஞ்சாப் அணியின் இளம் வீரர் முசீர் கான் நேரடியாக சந்தித்து பேசினார். அப்போது விராட் கோலியிடம் தமக்கு ஒரு எம்ஆர்ஃஎப் ஸ்பான்சர்ஷிப் கொண்ட பேட்டை பரிசாக கொடுக்குமாறு முஷீர் கான் கேட்டுக்கொண்டார். அதைக் கேட்டதும் உடனடியாக விராட் கோலி தனது ஒரு பேட்டை முசீர் கானுக்கு பரிசாகக் கொடுத்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

- Advertisement -

விராட் கோலியின் பரிசு:

அதைச் சிரித்த முகத்துடன் வாங்கிக் கொண்ட முஷீர் கான் பஞ்சாப் அணி உடை மாற்றும் அறைக்கு வந்தார். அங்கே இது யாருடைய பேட்? என்று சக வீரர் கேட்டார். அதற்கு இது “விராட் பையா கொடுத்த பேட்” என்று முஷீர் கான் மகிழ்ச்சியுடன் சொன்னார். அத்துடன் விராட் கோலி அந்தப் பரிசை தமக்குக் கொடுத்த போது அழுததாகவும் முசீர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும் நீங்கள் பரிசாக கொடுத்த பேட்டை தன்னுடைய அண்ணன் சர்பராஸ் கான் தமக்கு கொடுத்ததாக சொன்னதாக முஷீர் கூறினார். அதை பயன்படுத்தியே இவ்வளவு ரன்கள் அடித்து வளர்ந்துள்ளதாக விராட் கோலியிடம் சொன்னதாகவும் முஷீர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் பையா பேட்டை கொடுத்த போது நான் அழத் துவங்கினேன்”

- Advertisement -

முஷீர் நெகிழ்ச்சி:

“மேலும் நீங்கள் கொடுத்த இது போன்ற பேட்டில் நான் ஏராளமான ரன்கள் அடித்துள்ளேன் என்றும் விராட் பையாவிடம் சொன்னேன். நீங்கள் கொடுக்கக்கூடிய பேட்டை சர்பராஸ் பாய் எனக்கு பரிசாக கொடுத்து விடுவார் என்றும் விராட் பாயிடம் சொன்னேன்” எனக் கூறினார். அந்த வீடியோவை பஞ்சாப் நிர்வாகம் தங்களுடைய டிவிட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியா மாதிரியே.. வேணும்னே 10 நிமிஷம் லேட் பண்ற ரிஷப் பண்ட் கேப்டன்ஷிப் அண்டர்ரேட்டட்.. ஃகைப் பாராட்டு

கடந்த ஐசிசி 2024 அண்டர்-19 உலகக் கோப்பையில் சதத்தை அடித்து 260 ரன்கள் குவித்து இந்தியா ஃபைனல் வரை செல்ல உதவிய முஷீர் கான் மும்பை அணி ரஞ்சிக் கோப்பையையும் வெல்ல உதவினார். குறிப்பாக நாக் அவுட் போட்டியில் சதத்தை அடித்த அவர் உள்ளூரில் தொடர்ந்து அசத்தி வருகிறார். அதனால் அவரை பஞ்சாப் நிர்வாகம் தற்போது 30 லட்சம் அடிப்படை விலைக்கு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -