- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அண்ணன் சர்பராஸ் இந்த டெக்னிக் சொன்னாரு.. 181 ரன்கள் விளாசி சச்சினை முந்தியது பற்றி.. முஷீர் கான்

இந்தியாவில் 2024 துலீப் கோப்பை உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. அதில் பெங்களூரு நகரில் இந்தியா ஏ மற்றும் பின் அணிகள் மோதி வரும் போட்டி நடைபெற்று வருகிறது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா பி அணி போராடி 321 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு ஜெய்ஸ்வால், சர்ப்பராஸ் கான், ரிஷப் பண்ட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறினர். அதனால் 94-7 என தடுமாறிய இந்தியா பி அணி கண்டிப்பாக 200 ரன்கள் தொடாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது டெயில் எண்டரான நவ்தீப் சைனியுடன் சேர்ந்து 205 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முஷீர் கான் 15 பவுண்டரி 6 சிக்ஸருடன் சதமடித்தார்.

- Advertisement -

அசத்திய முஷீர் கான்:

அந்த வகையில் அசத்தலாக விளையாடிய அவர் 181 ரன்களும் சைனி 56 ரன்களும் குவித்து தங்கள் அணியை காப்பாற்றினர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணி இரண்டாவது நாள் முடிவில் 134-2 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக இப்போட்டியில் துலீப் கோப்பை வரலாற்றில் 20 வயதுக்குட்பட்ட வீரர்களில் அறிமுகப்போட்டியிலேயே அதிக ரன்கள் குவித்த 3வது வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (159 ரன்கள்) சாதனையை முசீர் கான் (181) உடைத்தார்.

அந்த இன்னிங்ஸ் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய அண்ணனும் (சர்பாராஸ் கான்) நானும் ஒரே ஆட்டத்தை கொண்டுள்ளோம். அவர் தான் களத்தில் என்னுடைய டெக்னிக்கை பின்பற்றுமாறு சொன்னார். குறிப்பாக முன்னோக்கி அடிப்பது வேலை செய்வது போல் தெரிந்தால் அதைப் பின்பற்றுமாறு அவரிடம் கூறினார்”

- Advertisement -

அண்ணனின் அறிவுரை:

“அதைப் பின்பற்றிய நான் முடிந்தளவுக்கு ரன்களை பற்றி சிந்திக்காமல் அதிக பந்துகளை எதிர்கொள்ள விரும்பினேன். நாள் முழுவதும் விளையாட விரும்பிய நான் ஒவ்வொரு பிரிவாக தாண்டுவதற்கு முயற்சித்தேன். நான் பேட்டிங் செய்ய வந்த போது பந்து ஸ்விங் மற்றும் கட்டாகி வந்தது. எனவே பந்தை என்னுடைய உடலுக்கு நெருக்கமாக எதிர்கொண்டு ரிஸ்க்கான ஷாட்டுகளை தவிர்க்க விளையாட முயற்சித்தேன்”

இதையும் படிங்க: ரூட் நம்பர் ஒன்னா இருந்தாலும் விராட் கோலி தான் அதுல பெஸ்ட்.. வில்லியம்சன் முக்கியம்.. அலிசா ஹீலி கருத்து

“அதை செய்தாலே ரன்கள் வரும் என்பது எனக்குத் தெரியும். அதன் பின் சைனி பாய் எனக்கு நிறைய தன்னம்பிக்கை கொடுத்தார். ஓவரில் 2 அல்லது 6 பந்துகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை வந்தாலும் அதை நான் செய்கிறேன் என்று அவர் சொன்னார். அவர் என்னுடைய சிந்தனை மற்றும் அணுகுமுறையை பொருத்தினார். அது போன்ற சூழ்நிலைகளில் பொதுவாக நான் முதல் 3 – 4 பந்துகளை எதிர்கொண்டு பின்னர் சிங்கள் எடுக்க முயற்சிப்பேன்” என்று கூறினார்.

- Advertisement -