ரூட் நம்பர் ஒன்னா இருந்தாலும் விராட் கோலி தான் அதுல பெஸ்ட்.. வில்லியம்சன் முக்கியம்.. அலிசா ஹீலி கருத்து

Alyssa healy
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் இதுவரை 145 டெஸ்ட் போட்டிகளில் 12377 ரன்களை குவித்து 34 சதங்கள் அடித்துள்ளார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அதிக சதங்கள் அடித்த இங்கிலாந்து வீரராக சாதனை படைத்துள்ளார். அத்துடன் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகிய ஃபேப் 4 பேட்ஸ்மேன்களை முந்திக் கொண்ட அவர் முதல் ஆளாக 10,000 டெஸ்ட் ரன்கள் அடித்து அசத்தி வருகிறார்.

அதனால் இந்தியாவின் விராட் கோலியை விட ஜோ ரூட் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று முன்னால் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் சமீபத்தில் பாராட்டினார். மேலும் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை முந்தி ஜோ ரூட் உலக சாதனை படைப்பார் என்றும் அவர் உறுதியான கணிப்பை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

நம்பர் 4 என்றாலும்:

அதனால் ஜோ ரூட் – விராட் கோலி ஆகியோரில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற விவாதங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஃபேப் 4 பேட்ஸ்மேன்களில் புள்ளி விவரங்கள் அடிப்படையில் ஜோ ரூட் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதாக ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் அலிசா ஹீலி கூறியுள்ளார். ஆனால் தரத்தின் அடிப்படையில் விராட் கோலி தான் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதாக அவர் பாராட்டியுள்ளார்.

மிட்சேல் ஸ்டார்க் மனைவியான அவர் சமீபத்திய பேட்டியில் இது பற்றிய கேள்விக்கு பதிலளித்தது பின்வருமாறு. “நம்பர் அடிப்படையில் பேசினால் நான் விராட் கோலியை நான்காவது இடத்தில் வைப்பேன். ஆனால் உண்மையில் மற்றவர்களை விட அவரை நான் முதலிடத்தில் வைப்பேன். இருப்பினும் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் அவர் நான்காவது இடத்தில் இருக்கிறார்”

- Advertisement -

தரமான விராட் கோலி:

“ஃபேப் 4 பேட்ஸ்மேன்களின் கேன் வில்லியம்சன் மொத்த நியூசிலாந்து அணியை வழி நடத்துகிறார். விராட் கோலி இந்த உலகில் மகத்தான வீரர்கள் என்பது உண்மையாகும். அதே சமயம் அவரை போன்ற வீரர்களும் உள்ளனர். ரோகித் சர்மா சதங்கள் அடிக்கக் கூடியவர். கேஎல் ராகுல் சதமடிப்பார். ஜடேஜாவும் 8வது இடத்தில் சதமடித்துள்ளார்”

இதையும் படிங்க: 202 ரன்ஸ் லீடிங்.. சிக்கலில் ருதுராஜ் அணி? அதிரடி திட்டத்தால் அரை நாளில் ஆட்டத்தை மாற்றிய ஸ்ரேயாஸ்

“விராட் கோலி விளையாடும் அணியில் யாரேனும் ஒரு பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்கின்றனர். ஆனால் வில்லியம்சன் அந்த ரன்களை அடிக்கவில்லையெனில் நியூசிலாந்து எப்போதும் வெற்றியை நெருங்காது” என்று கூறினார். முன்னதாக தரத்தின் அடிப்படையில் ஜோ ரூட்டை விட விராட் கோலி சிறந்தவர் என்று முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்க்கும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement