IND vs PAK : இந்தியா பாகிஸ்தான் மட்டும் என்ன ஒசத்தியா. எல்லா டீமையும் சமமா பாருங்க – முரளிதரன் கருத்து

Muralitharan
- Advertisement -

பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி துவங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 17-ஆம் தேதியுடன் நிறைவுபெற இருக்கிறது. இந்த தொடரில் எந்த அணி வெற்றி பெற்று ஆசிய கோப்பை சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ள வேளையில் இந்த தொடரின் சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த தொடரில் இந்திய அணி சூப்பர் ஃபோர் சுற்றில் தங்களது முதலாவது போட்டியில் செப்டம்பர் 10-ஆம் தேதி பாகிஸ்தான் அணியையும், செப்டம்பர் 15-ஆம் தேதி பங்களாதேஷ் அணியையும் எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் ஃபோர் சுற்றின் மூன்றாவது போட்டி செப்டம்பர் 10-ஆம் தேதி நாளை கொழும்பு நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியின் போது மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதால் செப்டம்பர் 11-ஆம் தேதி ரிசர்வ் டேவாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த போட்டியின் போது மழை குறுக்கிட அதிக வாய்ப்புள்ளது என வானிலை அறிக்கை வெளியானது.

இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டே நாளில் போட்டி நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்ததால் ஆசிய கவுன்சிலும் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இப்படி ஒரு தொடரின் லீக் போட்டிக்கு ரிசர்வே அறிவிக்கப்படுவது இதுவே வரலாற்றில் முதல் முறை.

- Advertisement -

ஆசிய கோப்பை தொடர் தொடங்கும்போது இறுதிப் போட்டிக்கு மட்டுமே ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் தற்போது இந்தியா பாகிஸ்தான் என பெரிய நாடுகள் மோதும் போட்டிக்கு ரிசர்வே அறிவிக்கப்பட்டுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் காட்டமான சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : அனைத்து அணிகளையுமே சரிசமமாக பார்க்க வேண்டும். இப்படி ஒரு போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே வழங்கப்பட்டு மற்ற போட்டிகளுக்கு வழங்காமல் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : 1987 உலக கோப்பையில் பால் ஃபாயாக இருந்து இன்னிக்கு இந்த கௌரவத்தை வாங்கிருக்கேன் – பிசிசிஐ’க்கு சச்சின் நன்றி

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : அர்ஜுனா ரணதுங்கா, தோனி என இருவருமே கூல் கேப்டன் பட்டங்களை வென்றவர்கள். 2010-ஆம் ஆண்டுகளில் எம்.எஸ் தோனி உலகின் சிறந்த கேப்டனாக இருந்தார் என்றால் 1990-களில் அர்ஜுனா ரணதுங்கா சிறந்த கேப்டனாக இருந்தார். கடந்த எட்டு ஆண்டுகளாக இலங்கை அணி ஒரு அணியாக செயல்படாமல் இருந்தனர். ஆனால் தற்போதுள்ள இலங்கை அணி மீண்டும் வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது எனவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement