2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரரான அவர்தான் அதிக விக்கெட்டுகளை எடுப்பார் – முரளிதரன் கருத்து

Muralitharan
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அட்டவணையும் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருந்தது. அந்த வகையில் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி துவங்கும் இந்த உலகக்கோப்பை தொடரானது நவம்பர் மாதம் 19-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

worldcup

- Advertisement -

கிட்டத்தட்ட 45 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன. அதோடு 48 போட்டிகளும் நடத்தப்பட உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையை வெற்றி பெற்ற இந்திய அணி அதனை தொடர்ந்து இந்த ஆண்டு இங்கு நடைபெறும் இந்த தொடரை வென்று சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தங்களது முதல் போட்டியில் அக்டோபர் 8-ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியாகியதும் பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்த உலகக் கோப்பை தொடர் குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Ravindra-Jadeja

அந்த வகையில் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தப்போகும் பந்துவீச்சாளர் குறித்த தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த ஒருநாள் உலக கோப்பை தொடரில் ரவீந்திர ஜடேஜா மட்டும் அனைத்து போட்டிகளிலும் விளையாடினால் நிச்சயம் அவரே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக இருப்பார் என்று முரளிதரன் ரவீந்திர ஜடேஜாவை பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் பந்துவீச்சாளராக நாதன் லயன் படைத்துள்ள வரலாற்று சாதனை – விவரம் இதோ

இந்திய அணிக்காக கடந்த 2009 ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ரவீந்திர ஜடேஜா இதுவரை 174 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement