டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் பந்துவீச்சாளராக நாதன் லயன் படைத்துள்ள வரலாற்று சாதனை – விவரம் இதோ

Lyon
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியானது பர்மிங்காமில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ENG vs AUS

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்களை குவித்துள்ளது.

அந்த அணி சார்பாக ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அதனைத்தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் பந்துவீச்சாளராக மாபெரும் வரலாற்று சாதனை ஒன்றினை படைத்துள்ளார்.

Nathan Lyon

அந்த வகையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாதன் லயனுக்கு 121 ஆவது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது. அதோடு தொடர்ச்சியாக 100 போட்டிகளில் எந்த ஒரு விடுப்பு இல்லாமல் விளையாடியுள்ள நாதன் லயன் தொடர்ந்து 100 போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பட்டியலில் 6 ஆறாவது வீரராக இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

இந்த பட்டியலில் இதுவரை 5 பேட்ஸ்மேன்கள் மட்டுமே அந்த சாதனையை நிகழ்த்தியிருந்த வேளையில் ஆறாவது வீரராக நாதன் லயன் முதல் பந்துவீச்சாளராக இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் அலைஸ்டர் குக் (159), ஆலன் பார்டர் (153), மார்க் வாக் (107), சுனில் கவாஸ்கர் (106), பிரெண்டன் மெக்கல்லம் (101) ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்திய அணியில் அவரு ரெகுலரா ஆடுறத நான் பாக்கணும். அவ்ளோ டேலன்ட்டான பிளேயர் அவரு – சபா கரீம் ஆதரவு

ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2011-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான நாதன் லயன் இதுவரை 121 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 495 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement