இந்திய அணியில் அவரு ரெகுலரா ஆடுறத நான் பாக்கணும். அவ்ளோ டேலன்ட்டான பிளேயர் அவரு – சபா கரீம் ஆதரவு

Karim
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் என்ற மிகப்பெரிய தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த சுற்று பயணத்திற்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிகள் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ROhit Sharma IND vs WI

- Advertisement -

மேலும் டி20 தொடருக்கான இந்திய அணியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் காயம் காரணமாக முன்னணி வீரர்கள் பலர் இடம்பெறாத வேளையில் வாய்ப்புக்காக காத்திருந்த சில வீரர்களுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. அந்த வகையில் கே.எல் ராகுலின் இடத்திற்கு தற்போது சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்துள்ள வாய்ப்புகளில் சிறப்பாக விளையாடியிருந்தாலும் அவருக்கு தொடர்ச்சியாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரிலாவது அவருக்கு முழுவதுமான தொடரிலும் விளையாடும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Samson

இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக எதிர்வரும் இந்த தொடர் குறித்தும், உலகக் கோப்பை குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரரான சபா கரீம் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் தற்போது போதுமான நட்சத்திர வீரர்கள் அணிகள் இடம்பெறவில்லை. எனவே நிச்சயம் ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சனை தொடர்ந்து விளையாட வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

- Advertisement -

ஏனெனில் மிகச்சிறந்த வீரரான அவர் இந்திய அணியில் ரெகுலராக இடம் பிடித்தால் நிச்சயம் அவரது திறமையை அவரால் வெளிப்படுத்த முடியும். ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டத்தை நாம் பார்த்துள்ளோம். நல்ல டேலண்ட் உடைய பிளேயரான அவருக்கு இந்திய அணியில் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் அவரது அதிகப்படியான திறமைகளை சர்வதேச கிரிக்கெட்டிலும் வெளிப்படுத்துவார்.

இதையும் படிங்க : 2023 ஒருநாள் உலககோப்பை தொடரில் இந்திய வீரரான இவர் விளையாட வாய்ப்பில்லையாம் – வெளியான தகவல்

எனவே அவரை அணியில் தொடர்ந்து விளையாட வைக்க வேண்டும் என்றும் சஞ்சு சாம்சன், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா போன்ற இளம் வீரர்களுக்கும் ரெகுலராக இந்திய அணிகள் இடம் கொடுக்க வேண்டும் எனவும் சபா கரீம் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement