கடைசி 2 வருஷமா நான் கிரிக்கெட் விளையாடம ஒதுங்கி இருந்ததுக்கு இதுதான் காரணம் – முரளி விஜய் பேட்டி

Vijay
Advertisement

38 வயதான இந்திய அணியின் சீனியர் வீரரும், தமிழக கிரிக்கெட் வீரருமான முரளிவிஜய் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக தொடர்ச்சியாக விளையாடி வந்தார். ஆனால் கடந்த 2018-ஆம் ஆண்டிற்குப் பிறகு அவர் இந்திய அணியில் சேர்க்கப்படாமல் இருந்துவருகிறார். அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் 2020ஆம் ஆண்டு வரை விளையாடிய அவர் அதன் பின்னர் ஐபிஎல் அணிக்காகவும் விளையாடவில்லை.

Vijay

கடைசியாக சிஎஸ்கே அணிக்காக பங்கேற்று விளையாடி இருந்த முரளி விஜய் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரிலும் விளையாடவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் கம்பேக் கொடுத்து தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் திருச்சி அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

- Advertisement -

இப்படி இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் டிஎன்பிஎல் மூலம் கம்பேக் கொடுத்தது குறித்து பேசியுள்ள முரளி விஜய் ஏன் இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடவில்லை என்பது குறித்தும் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கடந்த இரண்டு ஆண்டுகளாகவே எனது தனிப்பட்ட காரணத்திற்காக கிரிக்கெட்டை விட்டு விலகி இருந்தேன். என்னுடைய குடும்பம் மிகச்சிறியது அவர்களுடன் இருந்து கவனிக்க வேண்டியது என்னுடைய கடமை.

vijay

எனவே நான் என் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு அதன் பிறகு தற்போது மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பி உள்ளேன். தனிப்பட்ட வாழ்க்கை மிக விரைவாக சென்றதால் கிரிக்கெட்டிற்கு ஒரு பிரேக் எடுக்க விரும்பினேன். ஆனாலும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆசை என்னுள் இருந்தாலும் காயத்தால் அவதிப்பட்டேன்.

- Advertisement -

தற்போது இந்த பிரேக்கிற்கு பிறகு நல்ல முறையில் மீண்டு வந்துள்ளேன். மீண்டும் எனக்கு வாய்ப்பளித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கு நன்றி என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : எனக்கு கிரிக்கெட் விளையாட வேண்டும் என் வாழ்க்கையை மகிழ்ச்சியாக எதிர்கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேற எந்த குறிக்கோளும் இல்லை. என்னுடைய வாழ்க்கை எங்கு கொண்டு செல்கிறது என்று பார்ப்போம்.

இதையும் படிங்க : ஒருநாள் கிரிக்கெட்டில் லக் இன்றி 99 ரன்களில் ரன் அவுட்டான 5 – பேட்ஸ்மேன்களின் லிஸ்ட் இதோ

டிஎன்பிஎல் தொடரில் விளையாடும் தமிழக இளம் வீரர்களுக்கு எனது வாழ்த்துக்கள். ஏனெனில் இந்த தொடரின் மூலம் நிச்சயம் உங்களது திறமை வெளியுலகத்திற்கு தெரிய வரும். அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று அவர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement