ஒருநாள் கிரிக்கெட்டில் லக் இன்றி 99 ரன்களில் ரன் அவுட்டான 5 – பேட்ஸ்மேன்களின் லிஸ்ட் இதோ

Sachin-1
Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் நாட்டிற்காக களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு போட்டியிலும் 0 ரன்களில் தங்களது ஆட்டத்தை துவங்குவதால் களமிறங்கும் அத்தனை போட்டிகளிலும் சதமடித்து தனது அணியை சர்வதேச அரங்கத்தில் வெற்றி பெற வைக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் எதிரணி பவுலர்களை தில்லாக எதிர்கொள்வார்கள். அதுவும் ஒருநாள் கிரிக்கெட்டில் மெதுவாகவும் அல்லாமல் அதிரடியாகவும் அல்லாமல் பொறுப்புடன் சீராக பேட்டிங் செய்தால் மட்டுமே எதிரணியின் தரமான பவுலர்களை சமாளித்து முதல் ரன்னை எடுத்து அரை சதத்தை கடந்து பெரிய ரன்களை எடுக்க முடியும்.

sachin

அப்படி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விளையாடி அந்த குறிப்பிட்ட மைதானத்தின் பிட்ச்க்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டு முழு திறமையை வெளிப்படுத்தி எதிரணி பவுலர்களையும் சமாளித்து பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்க விட்டு 80 ரன்களை கடக்கும் பேட்ஸ்மேன்களுக்கு 90 ரன்களை தொட்டதும் இயற்கையாகவே பதற்றமும் படபடப்பும் ஏற்படும் என்று மருத்துவ ரீதியிலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அதுவரை கடினமாக உழைத்து சேர்த்த ஒவ்வொரு ரன்களும் திடீரென்று அவுட்டானால் சதமாக மாற்ற முடியாமல் போய்விடுவோமோ என்ற எண்ணங்கள் மிகுந்த கவனத்துடன் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும்.

- Advertisement -

99 ரன்-அவுட்:
அந்த கவனத்துடன் விளையாட வேண்டும் என்ற எண்ணமே அதுவரை சிறப்பாக பேட்டிங் செய்த அவர்களை பதற்றமடைய வைத்து சொதப்ப வைத்து இறுதியில் அவுட்டாக்கிவிடும். அதிலும் 99 ரன்களை எடுத்து 100-வது ரன்னுக்காக பேட்டிங் செய்யும் ஒரு பேட்ஸ்மெனின் இதயத்துடிப்பு பல மடங்கு துடிக்கும் அழுத்தத்தையும் தாண்டி சதமடித்தால் தான் அவரால் ஹெல்மெட்டை கழற்றி பேட்டை உயர்த்த முடியும். அதில் கொஞ்சம் சொதப்பினாலும் கூட கேட்ச், போல்ட் என ஏதேனும் ஒருவகையான முறையில் அவுட்டாகி காலத்திற்கும் அதை நினைத்து வருந்தும் நிலைமை ஏற்பட்டுவிடும். அப்படி 99 ரன்களில் அவுட்டாவதிலும் ரன் அவுட் முறையில் அவுட்டாவது ஒரு பேட்ஸ்மேனுக்கு மிகப்பெரிய வேதனையிலும் வேதனையாகும்.

kohli

ஏனெனில் ஒன்று 100-வது ரன்னை எடுக்கும்போது கிரீஸ் எனப்படும் வெள்ளைக்கோட்டை தொட முடியாமல் ஒரு சில இன்ச்களில் சதம் பறிபோய்விடும். அல்லது எப்போதாவது எதிர்ப்புறம் இருக்கும் பார்ட்னர் பேட்ஸ்மேன் “நான் இருக்கிறேன் 100-வது ரன்னை தைரியமாக எடு” என்று கூறிவிட்டு தாம் அவுட்டாகி விடுவோம் என்பதற்காக பாதியில் கைவிட்டாலும் அவுட்டாகி செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும். அப்படி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 99 ரன்களில் ரன் அவுட்டான பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. கிரேம் ஸ்மித்: 2002இல் இலங்கைக்கு எதிராக செஞ்சூரியனியில் நடந்த ஒருநாள் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர் கிரேம் ஸ்மித் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 99 (106) ரன்கள் எடுத்திருந்த போது 100-வது ரன்னை சிங்கிளாக எடுக்கலாம் என முயற்சித்தபோது மகிளா ஜெயவர்தனே மற்றும் ஜெயசூர்யா ஆகியோர் கூட்டணி போட்டு ரன் அவுட் செய்தனர்.

Graeme-Smith

அதனால் மனமுடைந்து பெவிலியன் திரும்பிய கிரேம் ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட்டில் 99 ரன்களில் ரன் அவுட்டான முதல் பேட்ஸ்மேன் என்ற பெயரை பெற்றாலும் அவரது அணி 317/6 ரன்களைக் குவித்து பின்னர் 177 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆறுதலாக அமைந்தது.

- Advertisement -

2. சனாத் ஜெயசூரியா: கடந்த 2003இல் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற விபி முத்தரப்பு தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 280 ரன்கள் இலக்கை துரத்திய இலங்கைக்கு 9 பவுண்டரி 2 சிக்சர்கள் பறக்கவிட்ட சனத் ஜெயசூரியா அதிரடியாக 99 (88) ரன்கள் எடுத்தார்.

ஆனால் பார்ட்னர் சங்ககாராவை நம்பி 100-வது ரன்னை எடுக்க முயன்ற அவரை மனமுடைந்து பெவிலியன் திரும்பும் வகையில் இங்கிலாந்து கேப்டன் நாசர் உசேன் ரன் அவுட் செய்தார். அதனால் அதுவரை வெற்றி பெறும் தருவாயில் இருந்த இலங்கை இறுதியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

3. ஆடம் கில்கிறிஸ்ட்: கடந்த 2003இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு அந்த நம்பிக்கை நட்சத்திரம் ஆடம் கில்கிறிஸ்ட் 14 பவுண்டரி 2 சிக்சர்கள் பறக்கவிட்டு அதிரடியாக 99 (88) ரன்களை எடுத்து சதத்தை நெருங்கினார். ஆனால் 100-வது ரன்னை சிங்கிளாக எடுக்க முயன்ற அவரை சமிந்தா வாஷ் அவுட் செய்ததால் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

அதனால் உலக கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் 99 ரன்களில் ரன் அவுட்டான முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெயரையும் அவர் பெற்றார். இருப்பினும் அப்போட்டியில் 319/5 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா பின்னர் 96 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதியில் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

4. இயன் மோர்கன்: 2019இல் இங்கிலாந்தின் விடிவெள்ளியை போல உலக கோப்பையை வென்று கொடுத்த இயான் மோர்கன் ஆரம்ப காலத்தில் தனது சொந்த நாடான அயர்லாந்துக்க்காக கடந்த 2006இல் அறிமுகமாக ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 99 ரன்கள் எடுத்து சதத்தை கிட்டத்தட்ட எட்டிப் பிடித்தார்.

ஆனால் குறுக்கே வந்த கோலின் ஸ்மித் மற்றும் நெய்ல் மெக்கல்லம் அவரை அறிமுக போட்டியில் 100 ரன்களை எட்ட விடாமல் ரன் அவுட் செய்து மனதை உடைத்து அனுப்பி வைத்தனர். இருப்பினும் அப்போட்டியில் 240/8 ரன்கள் எடுத்த அயர்லாந்து பின்னர் 85 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதால் மோர்கன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

5. சச்சின் டெண்டுல்கர்: 90 முதல் 99 வரையிலான ரன்களில் அவுட்டான பேட்ஸ்மேன்களின் எந்த பட்டியலை எடுத்து போட்டாலும் இவரின் பெயர் வராமல் இருக்காது. அதையும் தாண்டி 100 சதங்கள் அடித்ததே அவரின் தரமாகும். சொல்லப்போனால் 90களில் அதிக முறை அவுட்டாகி அதிலும் ஒரு பிரத்தியேக உலகசாதனை படைத்துள்ள இவர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த 2007இல் பெல்பாஸ்ட் மைதானத்தில் நிதானமாக பேட்டிங் செய்து 143 பந்துகளில் 99 ரன்களை எடுத்து சதத்தை முத்தமிட காத்திருந்தார்.

அப்போது குறுக்கே கௌஷிக் வந்ததை போல் சிங்கிள் எடுக்க முயன்ற அவரை மோர்னே வன் விக் எனும் தென் ஆப்பிரிக்க வீரர் பந்தை சரியாகப் பிடித்து விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சரிடம் கொடுக்க அதை வீணடிக்காமல் ரன் அவுட் செய்த அவர் “99இல் அவுட்டாவது உங்களுக்கு என்ன புதுசா” என்ற வகையில் பெவிலியனுக்கு திருப்பி வைத்தார். இறுதியில் அப்போட்டியில் இந்தியாவும் 4 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.

Advertisement