அப்டி என்ன பண்ணிட்டாருன்னு அவர செலக்ட் பண்ணிருக்கீங்க? தேர்வுக்குழுவை விளாசும் முரளி கார்த்திக் – ரசிகர்கள் அதிருப்தி

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி வரும் ஜூன் 7 – 11 வரை இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. வரலாற்றின் 2வது சாம்பியனை நிர்ணயிக்கும் அந்த போட்டியில் லீக் சுற்றில் அசத்தலாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா மோதுகின்றன. கடந்த முறை விராட் கோலி தலைமையில் அபாரமான செயல்பட்ட போதும் நியூசிலாந்துக்கு எதிராக ஃபைனலில் தோற்றுக் கோப்பையை கோட்டை விட்ட இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைக்கப் போராட உள்ளது.

Ajinkya Rahane WTC Final

- Advertisement -

அதற்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் நட்சத்திர சீனியர் வீரர் அஜிங்க்ய ரகானே யாருமே எதிர்பாராத வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2011இல் சர்வதேச அரங்கில் அறிமுகமாகி 3 வகையான கிரிக்கெட்டிலும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி 2015 உலகக் கோப்பையில் முக்கிய வீரராக விளையாடிய அவர் நாளடைவில் மெதுவாக விளையாடியதாலும் ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டதாலும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கழற்றி விடப்பட்டார். இருப்பினும் டெஸ்ட் அணியில் துணை கேப்டனாக அசத்திய அவர் 36க்கு ஆல் அவுட்டான பின் விராட் கோலிக்கு பதிலாக கேப்டனாக பொறுப்பேற்று 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மண்ணில் 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்து சரித்திரம் படைத்தார்.

நியாயமற்ற டிகே:
ஆனாலும் அத்தொடருக்கு பின் சதமடிக்காமல் இருந்ததால் இருந்ததால் டெஸ்ட் அணியிலும் அதிரடியாக கழற்றி விடப்பட்ட அவரின் கேரியர் முடிந்ததாக பார்க்கப்பட்டது. இருப்பினும் சமீபத்திய ரஞ்சிக் கோப்பையில் இரட்டை சதமடித்து ஓரளவு ஃபார்முக்கு திரும்பிய அவர் 2023 ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் யாருமே எதிர்பாராத வகையில் கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டில் வித்தியாசமான ஷாட்டுகளை அடித்து முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அதனால் 15 மாதங்கள் கழித்து மீண்டும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது பெரும்பாலான ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

murali 1

 

- Advertisement -

இந்நிலையில் ஹனுமா விஹாரி சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி காத்திருக்கும் நிலையில் எதன் அடிப்படையில் ரகானே தேர்வு செய்யப்பட்டார் என்று தேர்வு குழுவை முன்னாள் வீரர் முரளி கார்த்திக் விமர்சித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இது கடினமானது. இதற்கான காரணத்தை நாம் எஸ்எஸ் தாஸ் தலைமையிலான தேர்வு குழுவிடம் கேட்க வேண்டும். ஏனெனில் ரகானே நீக்கப்பட்ட போது 20 – 30 இன்னிங்ஸ்களில் எதுவுமே அடிக்கவில்லை என்பதை காரணமாக நீங்கள் சொன்னீர்கள்”

“ஆனாலும் ஒவ்வொரு நல்ல வீரர்களும் நிச்சயமாக கம்பேக் கொடுப்பார்கள் என்பதால் அவர்களுக்கான கதவுகள் மூடப்படாது. இதற்கு முன்பெல்லாம் நீங்கள் வெளியே சென்றால் மீண்டும் கம்பேக் கொடுப்பது அசாத்தியமானதாக இருந்தது. ஆனால் ரகானே தேர்வு செய்யப்பட்ட விதத்தில் ஏன் அனுமா விகாரி தேர்வு செய்யப்படவில்லை என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் அவர் தேர்வு குழுவினர் மீண்டும் தேர்வு செய்வதற்கு தேவையானவற்றை செய்துள்ளார். சிறந்த சாதனைகளை கொண்டுள்ளதாக ரகானேவுக்கு நானும் ரசிகன்”

- Advertisement -

hanuma vihari

“ஆனால் இது தான் மீண்டும் இந்தியாவுக்கு தேர்வு செய்யப்படுவதற்கான அளவுகோல் என்றால் ஹனுமா விஹாரி எந்த தவறையும் செய்யவில்லை. எனவே அவரையும் நீங்கள் ஏன் இதே கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை” என்று கூறினார். இருப்பினும் ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்த காரணத்தாலும் சூரியகுமார் யாதவ் சமீபத்தில் ஃபார்மின்றி தடுமாறுவதாலும் எப்போதுமே இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சிறப்பாக செயல்பட்டதாலும் ரகானே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:WTC Final : இந்திய அணியுடன் இணைந்து இங்கிலாந்து பயணிக்கும் 4 நெட் பவுலர்கள் – யார் யார் தெரியுமா?

அதை விட சமீபத்திய ரஞ்சி கோப்பையில் ஹனுமா விஹாரி காயமடைந்து ஒற்றை கையில் பேட்டிங் செய்ததை அனைவருமே பார்த்தோம். அப்படி காயமடைந்த அவர் இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தாலேயே ஃபைனலுக்கு தேர்வு செய்யப்படாத நிலையில் அதை தெரிந்து கொள்ளாமல் முரளி கார்த்திக் இப்படி பேசியுள்ளது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement