WTC Final : இந்திய அணியுடன் இணைந்து இங்கிலாந்து பயணிக்கும் 4 நெட் பவுலர்கள் – யார் யார் தெரியுமா?

Jasprit Bumrah Team India
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டெஸ்ட் போட்டிகளின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மற்றும் கவனத்தை அதிகரிக்கும் வகையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சீசனில் நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.

IND vs AUS

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் 2021-2023 சீசனுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியானது வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த இறுதிப் போட்டிக்கான மோதலில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடம் பிடித்துள்ளன.

அதன்படி ஜூன் ஏழாம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த இறுதி டெஸ்ட் போட்டியில் மோதும் ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் அந்த இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான இந்திய அணியும் பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Saini 1

அந்த இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், பும்ரா மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோர் வெளியேறி உள்ளதால் அவர்களுக்கான இடத்தில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிறைந்திருந்த வேளையில் பும்ராவின் இடத்தில் செய்து உனட்கட்டும், ரிஷப் பண்ட் இடத்தில் கே.எஸ் பரத்தும் இடம்பிடித்துள்ளனர்.

- Advertisement -

அவர்களை தவிர்த்து மற்றபடி டெஸ்ட் அணியில் தொடர்ச்சியாக விளையாடும் வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இறுதிப் போட்டிக்கான இந்திய அணியின் நெட் பவுலர்களாக எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : IPL 2023 : வார்னருக்கு பதில் அவர டெல்லியின் கேப்டனா போடுங்க, அது இந்தியாவுக்கும் நல்லது – எதிர்பாரா வீரருக்கு கவாஸ்கர் ஆதரவு

அந்த வகையில் இந்திய அணியின் அதிரடி வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் மற்றும் சமீப காலமாக இந்திய அணியுடன் தொடர்ச்சியாக பயணித்து வரும் முகேஷ் குமார், குல்தீப் சென் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement