IPL 2023 : வார்னருக்கு பதில் அவர டெல்லியின் கேப்டனா போடுங்க, அது இந்தியாவுக்கும் நல்லது – எதிர்பாரா வீரருக்கு கவாஸ்கர் ஆதரவு

Sunil Gavaskar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் டெல்லி கேபிட்டல்ஸ் தங்களுடைய முதல் 7 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடி வருகிறது. குறிப்பாக பந்து வீச்சு ஓரளவு சிறப்பாக இருந்தும் பேட்டிங் துறையில் பிரிதிவி ஷா, மிட்சேல் மார்ஷ் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் மெதுவாக விளையாட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்ட டேவிட் வார்னர் பெரிய ரன்களை குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து சேவாக் போன்ற முன்னாள் வீரர் விமர்சனங்களையும் தோல்விக்கான பலியையும் வாங்கிக் கொண்டார்.

Nortje

- Advertisement -

இருப்பினும் கடைசி 2 போட்டியில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் போராடி வருகிறது. அந்த அணிக்கு இதுவரை நடைபெற்ற 7 போட்டிகளிலும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் அக்சர் படேல் மட்டுமே பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் தொடர்ந்து சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார் என்று சொல்லலாம். மற்றொரு வீரர் ரவீந்திர ஜடேஜாவை போலவே ஆரம்ப காலங்களில் தடுமாறிய அவர் சமீப காலங்களில் இந்தியாவுக்காகவும் சரி ஐபிஎல் தொடரிலும் சரி சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

கேப்டனாக போடுங்க:
குறிப்பாக இந்த சீசனில் லோயர் ஆர்டரில் விளையாடும் அவர் 7 போட்டிகளில் 182 ரன்களையும் 6 விக்கெட்களையும் எடுத்து டெல்லி அணியின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக அசத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் 34 (34) ரன்கள் எடுத்த அவர் பந்து வீச்சில் 4 ஓவரில் 21 ரன்களை எடுத்து ஆல் ரவுண்டராக அசத்தி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

Axar Patel 1

அப்படி அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் அக்சர் படேல் டெல்லி அணியில் டேவிட் வார்னருக்கு கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வித்தியாசமான கருத்தை கூறியுள்ளார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்படுவதால் அக்சர் படேலுக்கு கிடைக்கும் அனுபவம் நாளடைவில் இந்தியாவுக்காகவும் சர்வதேச அளவில் உதவும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். உண்மையான வீரரான அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அவர் டெல்லி அணியில் கேப்டனாக நியமிக்கப்பட்டு சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்துவது சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கும் நிறைய பயன்களை கொடுக்கும். அந்த வாய்ப்பு நீண்டதாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

gavaskar

அதாவது வெளிநாட்டு வீரருக்கு பதிலாக இந்திய அணியில் முதன்மை வீரராக செயல்படும் அச்சர் பட்டேல் டெல்லி அணியில் கேப்டனாக செயல்படுவது இந்தியாவுக்கு பெரிய பயனை கொடுக்கும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆனாலும் இதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் கூட பெரிய அளவில் கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத அவர் சாதாரண வீரராக சுதந்திரமாக செயல்படுவதே சிறப்பாக இருக்கும் என்று சொல்லலாம்.

இதையும் படிங்க:WTC Final : அந்த 2 பேரு முக்கியம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் களமிறங்கும் தனது 11 பேர் இந்திய அணியை வெளியிட்ட கவாஸ்கர்

ஏனெனில் அவரைப் போலவே ஆரம்ப காலங்களில் தடுமாறி 2019க்குப்பின் உலகின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டராக முன்னேறிய செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் ஜடேஜா கடந்த வருடம் சென்னை அணியில் தேவையின்றி கொடுக்கப்பட்ட கேப்டன்ஷிப் அழுத்தத்தால் தடுமாறியதை அனைவருமே பார்த்தோம். எனவே அதே போல கேப்டன்ஷிப் அழுத்தம் என்பது அக்சர் படேல் செயல்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதைத்தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல போராடி வரும் டெல்லி அடுத்ததாக தன்னுடைய 8வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சொந்த ஊரில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement