
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. சவுதி அரேபியாவில் நடைபெற்ற இந்து மெகா ஏலத்தில் கலந்து கொண்ட பத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களை தவிர்த்து தங்களது அணிக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் போட்டி போட்டு விலைக்கு வாங்கியது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது.
அந்த வகையில் ஏற்கனவே ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது அடுத்த ஆண்டு கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் பல்வேறு முக்கிய வீரர்களை விலைக்கு வாங்கியது. ஹார்டிக் பாண்டியாவின் தலைமையில் ஏற்கனவே பும்ரா, சூரியகுமார் யாதவ், ரோஹித் சர்மா, திலக் வர்மா ஆகியோர் தக்கவைக்கப்பட்டிருந்த வேளையில் பல்வேறு புதிய வீரர்களை அந்த அணி விலைக்கு வாங்கியிருந்தது.
அந்த வகையில் கடந்த ஆண்டு மும்பை அணிக்காக அறிமுகமாகி விளையாடியிருந்த நட்சத்திர இளம் வீரரான நமன் தீரையும் இம்முறையும் மும்பை அணி 5 கோடியே 20 லட்சம் ரூபாய் என்கிற பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதன்மூலம் அன்கேப்டு வீரர் ஒருவர் அதிக தொகைக்கு ஏலம் போன வீரராக அவர் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமான அவர் 7 போட்டிகளில் ஒரு அரைசதத்துடன் 140 ரன்கள் அடித்திருந்தாலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் மிகச் சிறப்பாக இருப்பதினாலும், அவரை எதிர்கால பினிஷராகவும் பார்ப்பதனாலும் மும்பை அணி அவரை மீண்டும் ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்நிலையில் மும்பை அணி தன்னை தேர்வு செய்யாமல் போயிருந்தால் நான் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கலாம் என்று தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : 2022 ஆம் ஆண்டிற்கு முன்னதாக நான் எனக்கு இங்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கனடா நாட்டிற்கு செல்லலாம் என்று முடிவு செய்தேன். என்னுடைய அக்கா அங்கு இருப்பதனால் நான் அங்கு பயணிக்க விரும்புகிறேன்.
ஆனால் எனது அப்பா தான் இன்னும் ஒரு வருடம் இங்கிருந்து முயற்சி செய் என்று கூறினார். அந்த வகையில் நான் முயற்சி செய்தபோது எனக்கு ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி ரஞ்சி கோப்பையில் விளையாடிய பின்னர் அடுத்த ஆண்டு மும்பை அணி என்னை ஐபிஎல் தொடருக்காக ஏலத்தில் எடுத்தது. அப்படி என்னை மும்பை அணி எடுத்த பின்னர் என்னுடைய சூழ்நிலை முற்றிலும் மாறியது.
இதையும் படிங்க : மோசமான காலத்துல இதை செஞ்ச மஹி பாயை மிஸ் பண்ணுவேன்.. ராஜஸ்தானுக்கு செல்லும் தேஷ்பாண்டே உருக்கம்
அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் அவர்கள் என்னை ஒரு பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளனர். நிச்சயம் மும்பை அணிக்காக இந்த சீசனில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியிலும் விரைவில் இடம் பிடிக்க விரும்புவதாக நமன் தீர் கூறியது குறிப்பிடத்தக்கது.