ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து தீபக் சஹர் உள்ளிட்ட சில வீரர்கள் வேறு அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். அந்த வரிசையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய துஷார் தேஷ்பாண்டே அடுத்த வருடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த அவர் 2022 முதல் சென்னை அணிக்காக விளையாடி வந்தார். அந்த வாய்ப்பில் 31 போட்டியில் அவர் 39 விக்கெட்டுகளை 9.39 என்ற எக்கனாமியில் எடுத்தார். பெரும்பாலான போட்டிகளில் விக்கெட்டுகளை எடுத்த அவர் அதற்கு நிகராக ரன்களை வாரி வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். அதனால் அவரை நீக்குமாறு சிஎஸ்கே ரசிகர்களே கடுமையாக விமர்சித்தார்கள்.
தோனிக்கு நன்றி:
ஆனால் அவரையும் வைத்து போதுமான ஆதரவுகளை கொடுத்த தோனி 2023 ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணிக்காக வென்று காட்டினார். இருப்பினும் அதிக ரன்களை வாரி வழங்குவதால் அவரை சென்னை அணி நிர்வாகம் இந்த வருடம் விடுவித்துள்ளது. இந்நிலையில் மோசமான காலங்களிலும் தமக்காக நின்ற தோனியை மிகவும் மிஸ் செய்வேன் என்று தேஸ்பாண்டே கூறியுள்ளார்.
மேலும் ஜாம்பவான் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் ராஜஸ்தான் அணியில் விளையாடுவதற்காக காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசுவது பின்வருமாறு. “மஹி பாயை நான் நிறைய மிஸ் செய்வேன். அவர் என்னுடைய மோசமான மற்றும் நல்ல காலங்களில் எனக்காக நின்றார். இருப்பினும் தற்போது ராஜஸ்தான் அணி என் மீது நம்பிக்கையை காண்பித்துள்ளது”
ராஜஸ்தான் அணி:
“எனவே அவர்களுக்காக ஒவ்வொரு போட்டியிலும் என்னுடைய 100% நல்ல பங்களிப்பை கொடுப்பேன். சஞ்சு சாமான் தலைமையில் புதிய அணியில் விளையாடி இந்திய அணிக்காக ஏராளமான அற்புதங்களை நிகழ்த்திய ராகுல் டிராவிட் அவர்களிடம் நிறைய கற்றுக்கொள்ள நான் காத்திருக்கிறேன்” என்று கூறினார். அப்படி ஐபிஎல் தொடரில் ஓரளவு அசத்தியதால் சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் தேஷ்பாண்டே இந்திய அணிக்காக அறிமுகமாகி விளையாடினார்.
இதையும் படிங்க: விராட் கோலியை நிறைய மதிக்கிறேன்.. அதுல ஆர்சிபி உலகத் தரமானது.. பிலிப் சால்ட் பேட்டி
அதை அடுத்து வருடம் ராஜஸ்தான் அணிக்காக அவர் 6.5 கோடிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த அணியில் ஜெய்ஸ்வால் உள்ளிட்ட நிறைய இளம் வீரர்கள் உள்ளார்கள். அந்த புதிய அணியுடன் 2008க்குப்பின் ராகுல் டிராவிட் வழி காட்டுதலில் ராஜஸ்தான் அணி கோப்பையை வெல்வதற்காக தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.



