ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நிறைவு பெற்றது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக இங்கிலாந்து வீரர் ஃபிலிப் சால்ட் வாங்கப்பட்டார். அதிரடியாக விளையாடக்கூடிய துவக்க வீரரான அவர் கடந்த வருடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடினார். அந்த வாய்ப்பில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் கொல்கத்தா கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.
இருப்பினும் இம்முறை அவரை கொல்கத்தா தக்க வைக்கவில்லை. அதனால் ஏலத்தில் கலந்து கொண்ட அவரை பெங்களூரு நிர்வாகம் 11.50 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெங்களூரு அணி கடந்த வருடம் கேப்டனாக செயல்பட்ட துவக்க வீரர் டு பிளேஸிஸை இந்த வருடம் தக்க வைக்காமல் விடுவித்தது. எனவே அவருக்கு பதிலாக பெங்களூரு சால்டை வாங்கியுள்ளது என்றே சொல்லலாம்.
கோலிக்கு மரியாதை:
இந்நிலையில் பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மீது தமக்கு மிகப்பெரிய மரியாதை இருப்பதாக பிலிப்ஸ் சால்ட் தெரிவித்துள்ளார். அத்துடன் ஐபிஎல் தொடரில் விளையாடாத காலங்களில் பெங்களூரு அணியின் ஆட்டத்தை இங்கிலாந்தில் தொலைக்காட்சியில் பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் கோலி, கெயில், டீ வில்லியர்ஸ் போன்ற வீரர்களுடன் பெங்களூருவின் பேட்டிங் எப்போதும் உலகத்தரம் வாய்ந்ததாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி மீது எனக்கு அளவுகடந்த மரியாதை இருக்கிறது. அவருக்கு எதிராக விளையாடிய போதே அவருடன் பேசி சிரித்து நகைச்சுவைகளை பகிர்ந்து கொண்டேன். எனவே தற்போது அவருடன் விளையாடுவதற்காக நான் அவருடன் காத்திருக்கிறேன். களத்திற்கு சென்று அதிரடியாக விளையாட வேண்டும் என்ற தெளிவான வழியை பெங்களூரு அணி கொண்டுள்ளது”
பெங்களூரு அணியில் சால்ட்:
“அவர்கள் எப்போதும் நெருப்பான குணமுள்ளவர்களை கொண்டுள்ளார்கள். அவர்களுடைய பேட்டிங் வரிசை எப்போதும் உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கும். சில வருடங்களுக்கு முன்பாகவே ஐபிஎல் தொடரை நான் பார்க்கும் போது அவர்கள் விளையாடுவதை தொலைக்காட்சியில் பார்ப்பேன். தற்போது அவர்கள் அணியில் ஆண்டி பிளவர் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் எப்படி இருக்கிறார்கள்”
இதையும் படிங்க: வேறு வழியின்றி 1.5 கோடி வீரரை கேப்டனாக மாற்றப்போகும் கொல்கத்தா அணி – சாம்பியன் சந்தித்த சிக்கல்
“எனவே அவர்களுடைய தலைமையில் நான் விளையாடுவதற்காக காத்திருக்கிறேன். நாங்கள் ஒரே மாதிரியாக சிந்திக்கக் கூடியவர்கள் என்பது எனக்கு தெரியும்” என்று கூறினார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் பிலிப் சால்ட் 21 போட்டிகளில் 653 ரன்களை 173.56 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்துள்ளார். அந்த வகையில் 2025 ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களுடன் கோப்பையை வெல்லும் முனைப்புடன் பெங்களூரு விளையாட உள்ளது.



